பாஜக வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது - மோடியின் பழைய படத்துடன் பொதுச் செயலர் ட்விட்டரில் பதிவு

ராம் மாதவ் வெளியி்ட்டுள்ள ட்விட்டர் பதிவில் இடம்பெற்றுள்ள பிரதமர் மோடியின் பழைய படம்.
ராம் மாதவ் வெளியி்ட்டுள்ள ட்விட்டர் பதிவில் இடம்பெற்றுள்ள பிரதமர் மோடியின் பழைய படம்.
Updated on
1 min read

புதுடெல்லி

ஜமமு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்ட பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது என பாஜக தேசிய பொதுச்செய லாளர் ராம் மாதவ் ட்விட்டரில் தெரிவித்து உள்ளார்.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது என மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் அறிவித்தார். இதனிடையே நேற்று பாஜக மூத்த தலைவரும், தேசிய பொதுச் செயலாளருமான ராம் மாதவ் ட்விட்டரில் ஒரு தகவலை பதிவிட்டு உள்ளார். மேலும் அதனுடன் பிரதமர் மோடியின் பழைய புகைப் படம் ஒன்றையும் அவர் வெளியிட் டுள்ளார். அதில் அவர் 370 சட்டப் பிரிவு நிகழ்வில் “வாக்குறுதி நிறை வேற்றப்பட்டது” என்ற செய்தியை அவர் தெரிவித்துள்ளார்.

அந்த புகைப்படத்தில், இளம் வயது நரேந்திர மோடி ஒரு மேடை யில் அமர்ந்திருக்கிறார். மெத்தை மீது அவர் ஒரு கையை வைத்து சாய்ந்தபடி அவர் அமர்ந்திருக் கிறார். அதன் பின்னணியில், ஒரு பதாகை உள்ளது; அந்தப் பதாகையில் “370 ஐ அகற்றி, பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்” ... என இந்தியில் எழுதப்பட்டு உள்ளது.

முன்னதாக ராம் மாதவ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இன்று என்ன ஒரு மகத்தான நாள். இறுதியாக ஜம்மு காஷ் மீரை இந்திய ஒன்றியத்தில் ஒருங் கிணைப்பதற்காக டாக்டர் ஷியாம் பிரசாத் முகர்ஜியுடன் தொடங்கி ஆயிரக்கணக்கான தியாகிகள் கவுரவிக்கப்படுகிறார்கள், மேலும் மத்திய அரசுடன் காஷ்மீர் ஒருங் கிணைப்பு நிகழும் என்ற கனவு ஏழு தசாப்தங்களாக இருந்தது. அது இப்போது கைகூடியுள்ளது. உங்கள் வாழ்நாளில், இது நடக்கும் என்று யாராவது எப்போதாவது கற்பனை செய்தீர்களா?” என்று கூறியுள்ளார். - பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in