Published : 05 Aug 2019 07:01 PM
Last Updated : 05 Aug 2019 07:01 PM

மூன்றாம் பாலினர் உரிமைகள் பாதுகாப்பு மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்

மூன்றாம் பாலினர்களுக்கு சமூக, பொருளாதார, கல்வி அதிகாரமளிக்க வகை செய்யும் மூன்றாம் பாலின நபர்களுக்கான உரிமைகள் பாதுகாப்பு மசோதா மக்களவையில் இன்று நிறைவேறியது.

இந்த மசோதா ஜூலை 2019-ல் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த மசோதா குறித்து மத்திய சமூக நீதி இணையமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா கூறும்போது, நாட்டில் சுமார் 4.80 லட்சதுக்கும் அதிகமான மூன்றாம் பாலினர் இருக்கின்றனர். 

இவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் உள்ளிட்ட குற்றங்களை தடுக்க இந்த மசோதா உதவுகிறது. மிக முக்கியமாக மூன்றாம் பாலினர் பிச்சை எடுப்பது குற்றம் என்ற ஒரு பிரிவு தற்போது நீக்கப்பட்டுள்ளது. இது முந்தைய அரசு கொண்டு வந்த மசோதாவில் இருந்தது, தற்போது நீக்கப்பட்டுள்ளது.

அதாவது இந்த மசோதாவின் படி பிறக்கும் போது இவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஆண் அல்லது பெண் என்ற அடையாளம் பொருந்தாத நபர்கள், திருநங்கைகள், திருநம்பிகள், அதாவது இவர்கள் எந்த விதமான அறுவை சிகிச்சையில் தங்களை மாற்றிக் கொண்டாலும் சமூக கலாச்சார அடையாளங்களான 'கின்னர்', 'ஹிஜ்ரா', 'அரவாணி', மற்றும் ஜோக்தா ஆகியோர்கள் மூன்றாம் பாலினர்களாகவே கருதப்படுவார்கள். 

இந்த மசோதாவின் படி ஹார்மோன் சிகிச்சை அல்லது பால்யல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டாலும் அவரக்ள் ஆணாகவோ, பெண்ணாகவோ, 3ம் பாலினராகவோ தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள உரிமைகளை வழங்குகிறது. மாவட்ட மேஜிஸ்ட்ரேட் அல்லது மாவட்ட ஸ்க்ரீனிங் கமிட்டி மூலம் மூன்றாம் பாலினராக சான்றிதழ் பெற வேன்டும். 

முன்னதாக விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜக எம்.பி. மனோஜ் திவாரி, 3ம் பாலினர்கள் மகிழ்ச்சியின் குறியீடு என்றார். 

-பிடிஐ

இந்த மசோதாவின் இன்னொரு முக்கிய அம்சம் இதன் முந்தைய மசோதாவில் 3ம் பாலினர் பிச்சை எடுப்பது குற்றம் என்று கூறப்பட்டிருந்த ஷரத்து தற்போதைய மசோதாவில் நீக்கப்பட்டுள்ளது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x