Published : 05 Aug 2019 02:33 PM
Last Updated : 05 Aug 2019 02:33 PM

ஜம்மு காஷ்மீர் விவகாரம்: மத்திய அரசுக்கு அரவிந்த் கேஜ்ரிவால் ஆதரவு

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த முடிவை ஆதரிக்கிறோம் என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாகவே ராணுவ படைகள் குவிக்கப்பட்டதால் பெரும் பதற்றம் நிலவி வந்தது. மேலும் அமர்நாத் யாத்திரைக்குச் சென்ற பக்தர்கள் பாதியிலே திரும்பிவர அறிவுறுத்தப்பட்டனர், பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் காலவரையின்றி மூடப்பட்டன.  உமர் அப்துல்லா, மெகபூபா மூஃப்தி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் நேற்று வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.  அங்கு இணைய தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. 

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு உரிமைச் சட்டம் 35ஏ, 370 ஆகிய பிரிவுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும்,  காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்படும் என்றும் நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். 

இந்நிலையில் மத்திய அரசின் முடிவுக்கு அரசியல் தலைவர்கள் பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். 
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “ நாங்கள் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் அரசின் முடிவை ஆதரிக்கிறோம். இந்த முடிவு ஜம்மு காஷ்மீரில் அமைதி மற்று முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x