370 சட்டப்பிரிவு ரத்து; அதிமுக ஆதரவு:  தேசத்தின் ஒருமைப்பாட்டை ஜெயலலிதா வலியுறுத்தினார்- நவநீத கிருஷ்ணன்

370 சட்டப்பிரிவு ரத்து; அதிமுக ஆதரவு:  தேசத்தின் ஒருமைப்பாட்டை ஜெயலலிதா வலியுறுத்தினார்- நவநீத கிருஷ்ணன்
Updated on
1 min read

ஸ்ரீநகர்

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 -வது சட்டப்பிரிவு ரத்து, 2 மாநிலங்களாகப் பிரிக்கும்  மத்திய அரசின் முடிவுக்கு மாநிலங்களவையில் அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. 

மாநிலங்களவையில் இன்று கடும் அமளிக்கு இடையே ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். இதுதொடர்பான மசோதாவை அவர் தாக்கல் செய்தார். 

இதைத் தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்படுவதாக அமித் ஷா அறிவித்தார். அதன்படி ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இரு யூனியன் பிரதேசமாகச் செயல்படும் என அமித் ஷா அறிவித்தார். 

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து, 2 மாநிலங்களாகப் பிரிக்கும்  மத்திய அரசின் முடிவுக்கு மாநிலங்களவையில் அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதிமுக மாநிலங்களவை எம்.பி. நவநீதகிருஷ்ணன் பேசுகையில், ''ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்து, 2 மாநிலங்களாகப் பிரிக்கும் மத்திய அரசின் முடிவை அதிமுக வரவேற்கிறது. 370-வது சட்டப் பிரிவு தற்காலிகமானது தான் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போதைய சூழலில் இது தேவையில்லை என்ற முடிவை ஏற்கிறோம். தேசத்தின் ஒருமைப்பாடு என்பதை மறைந்த முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி வந்தார். அவரது வழியில் இதனை அதிமுக ஆதரிக்கிறது'' என்றார். 
 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in