

இந்திய, பாகிஸ்தான் உறவில் புதிய ஒளிக் கீற்று தோன்றியுள்ளது என்று பாஜக நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் எம்.ஜே.அக்பர் நேற்று கூறியதாவது: பிரதமர் மோடியும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் ரஷ்யாவில் சந் தித்துப் பேசியுள்ளனர். இதன் மூலம் இருநாட்டு உறவில் புதிய ஒளிக் கீற்று தோன்றியுள்ளது. இருநாட்டு உறவை முன்னெடுத்து செல்வதற்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதுவரை நல்ல தீவிரவாதிகள், கெட்ட தீவிரவாதிகள் என்று கருத்து கூறிவந்த பிரதமர் நவாஸ் ஷெரீப் முதல்முறையாக தீவிரவாதம் எந்த வகையில் வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார். மும்பை தாக்குதல் வழக்கில் கூடுதல் ஆதாரங்களை பாகிஸ்தான் கோரி யுள்ளது. லக்வின் குரல் பதிவு ஆதாரங்களை ஏற்றுக் கொண்டிருக் கிறது. மேலும் அந்த வழக்கு விசாரணை தீவிரப்படுத்தவும் பாகிஸ்தான் உறுதியளித்துள்ளது.
இந்த நேரத்தில் காங்கிரஸ் விமர்சனங்களுக்கு பதில் அளித்து எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.