மெஹபூபா முப்திக்கு லஞ்ச ஒழிப்புத்துறை நோட்டீஸ்

மெஹபூபா முப்திக்கு லஞ்ச ஒழிப்புத்துறை நோட்டீஸ்
Updated on
1 min read

ஸ்ரீநகர்

ஜம்மு காஷ்மீர் வங்கிக்கு பணி யாளர்கள் நியமனம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவருமான மெஹபூபா முப்திக்கு லஞ்ச ஒழிப்புத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இது தொடர்பாக மெஹபூபா முப்திக்கு லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த சனிக்கிழமை அனுப்பி யுள்ள நோட்டீசில், ‘‘நீங்கள் காஷ்மீர் முதல்வராக இருந்த போது, ஜம்மு காஷ்மீர் வங்கியில் சில பணியாளர் நியமனங்கள் அமைச்சர்களாக இருந்த ஒரு சிலரின் பரிந்துரை யின்பேரில் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்த பரிந்துரைகளுக்கு வாய்மொழியாகவோ மற்ற முறைகளிலோ ஒப்புதல் அளித் தீர்களா என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நோட்டீஸ் குறித்து மெஹபூபா முப்தி வெளியிட் டுள்ள ட்விட்டர் பதிவில், ‘‘லஞ்ச ஒழிப்புத்துறையின் நோட்டீஸ் வியப்பு அளிக்க வில்லை. முக்கிய அரசியல் தலைவர்களை துன்புறுத்து வதற்கும் அவர்கள் ஒன்று சேர் வதை தடுப்பதற்கும் முயற்சி கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இன்று நாம் அனைவரும் ஒன்று சேருவதற்கு நான் ஒரு சிறிய கருவியாக இருக்கிறேன். இதுபோன்ற தந்திரங்கள் பலனளிக்காது’’ என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in