

பெங்களூரு
பிளாஸ்டிக் பயன்படுத்திய பெங்களூரு மேயருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கடந்த ஜூலை 26-ம் தேதி முதல்வர் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தது. புதிய முதல்வரை பல்வேறு தரப்பினர் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
பெங்களூரு மேயரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கங்காம்பிகே மல்லிகார்ஜுன் கடந்த 30-ம் தேதி முதல்வர் எடியூரப்பாவை சந்தித் தார். அப்போது உலர் பழங்கள் அடங்கிய கூடையை முதல்வருக்கு வழங்கினார். அந்த பழக்கூடை பிளாஸ்டிக்கால் சுற்றப்பட்டி ருந்தது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
பெங்களூருவில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக் கப்பட்டுள்ள நிலையில் மேயர் கங்காம்பிகே அவ்வப்போது நகரில் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார். அவரே பிளாஸ்டிக்கை பயன்படுத்தியது சமூக வலை தளங்களில் பெரும் விவாதப் பொருளானது.
இதைத் தொடர்ந்து பெங்களூரு மாநகராட்சி, மேயர் கங்காம்பிகா வுக்கு ரூ.500 அபராதம் விதித்தது. அந்த அபராதத் தொகையை மேயர் செலுத்தி ரசீதினை பெற்றுக் கொண்டார்.
இதுகுறித்து கங்காம்பிகே கூறும்போது, "பிளாஸ்டிக் சுற்றப் பட்ட பழக்கூடையை வாங்கியது யார் என்பது தெரியவில்லை. என் தவறை உணர்ந்து கொள் கிறேன். பெங்களூருவின் முதல் குடிமகளாகிய நான், பிறருக்கு முன்உதாரணமாக அபராதம் செலுத்தியுள்ளேன்" என்று தெரி வித்தார்.