

புதுடெல்லி
சர்வதேச நண்பர்கள் தினத்தை முன்னிட்டு இந்தியாவுக்கு இஸ் ரேல் வாழ்த்து தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி தனது நன்றியை யும் நட்பையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இஸ் ரேலுக்கு 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் அரசு முறைப் பயணமாக சென்றார். இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே நட்புறவு அதிகரித்தது. வரும் செப்டம்பர் மாதம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்திய வர உள்ளார். இரு நாடுகளுக்கும் நட்புறவு பலப்பட்டு வரும் நிலையில், சர்வதேச நண்பர்கள் தினம் இந்தியாவில் நேற்று கொண்டாடப்பட்டதை முன்னிட்டு இந்தியாவுக்கு இஸ்ரேல் வாழ்த்து தெரிவித்தது.இந்தியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் ட்விட்டரில் இந்த வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளது.
அமிதாப் பச்சன், தர்மேந்திரா நடித்து வெளியான ‘ஷோலே’ இந்திப் படத்தில் இடம் பெற்ற ‘யே தோஸ்தி ஹம் நஹி தோடெங்கே..’ (இந்த நட்பை நாங்கள் உடைக்க மாட்டோம்) பாடல் வரியை ட்விட்டர் பதிவில் இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. பாட லின் பின்னணி இசை ஒலிக்கும் வீடியோவையும் வெளியிட்டுள் ளது. ‘இனிய நட்பு நாள் இந்தியா. எங்களது வலுவான நட்பும், கூட்டாண்மையும் வளர்ந்து புதிய உயரங்களைத் தொடும்’ என்று கூறப்பட்டுள்ளது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சார்பில் இந்த வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியும் நெதன்யாகுவும் கைகுலுக்கும் படங்களையும் வெளியிட்டுள்ளது.
இதற்கு பிரதமர் மோடியும் இஸ்ரேல் பிரதமருடனான நட்பை யும் பகிர்ந்து கொண்டுள்ளார். ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், ‘‘இந்தியாவுக்கும் இஸ் ரேலுக்கும் நட்பு என்றும் அழி யாதது. இஸ்ரேல் மக்களுக்கும் நண்பர் நெதன்யாகுவுக்கும் வாழ்த் துக்கள். வரும் காலத்தில் இருநாடு களின் நட்பு மேலும் வளர்ந்து வலுப் பெறும்’’ என்று தெரிவித்துள்ளார்.