

புதுடெல்லி
மத்திய பாஜக அரசால் எதையும் கட்டமைக்க முடியாது, அழிக்க மட்டுமே முடியும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், “பாஜக அரசால் எதையும் கட்டமைக்க முடியாது. கடந்த பல பத்தாண்டுகளாக மிகுந்த ஆர்வம் மற்றும் கடின உழைப்பால் உருவாக்கப்பட்டவற்றை அழிக்க மட்டுமே முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவுடன் ஊடக செய்திகள் சிலவற்றை ராகுல் இணைத்துள்ளார்.
பொருளாதார மந்தநிலை குறித்து பிரபல தொழிலதிபர் ஒரு வரின் எச்சரிக்கை, பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஆகிய நிறுவனங் கள் தங்கள் ஊழியர்களுக்கு ஜூலை மாதம் சம்பளம் கொடுக்கத் தவறியது, 3 லட்சம் ஊழியர்களை குறைக்க ரயில்வே திட்டம், ஆட்டோமொபைல் துறையில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஜூன் மாதம் விற்பனை சரிவு ஆகிய செய்தி களை ராகுல் தனது பதிவுடன் இணைத்துள்ளார். - பிடிஐ