

உன்னாவ்
உத்தரபிரதேசத்தில் பாலியல் புகாரில் சிக்கி சிறையில் இருக் கும் சட்டப்பேரவை உறுப்பினர் குல்தீப் சிங் செங்கரின் துப்பாக்கி உரிமங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன.
உத்தரபிரதேச மாநிலம் உன் னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண், பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் மீது 2017-ல் பலாத்கார புகார் கூறினார். இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, குல்தீப் சிங்கை கடந்து ஆண்டு கைது செய்தது.
இந்நிலையில், அந்த இளம் பெண் சென்ற கார் மீது லாரி மோதி யதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் அந்தப் பெண்ணின் உறவினர் இருவர் உயிரிழந்தனர். இதில் சதி இருப்பதாக குற்றச் சாட்டு எழுந்தது. இதையடுத்து இந்த விபத்து தொடர்பாக குல்தீப் சிங் உள்ளிட்டோர் மீது சிபிஐ மேலும் ஒரு வழக்கு பதிவு செய் துள்ளது. இதையடுத்து குல்தீப் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டார்.
இதனிடையே, குல்தீப் சிங்கின் துப்பாக்கி உரிமங்களை ரத்து செய்யக்கோரி, அந்த பெண் ணின் குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு கொடுத்திருந்தனர். இந்த மனுவை பரிசீலித்த ஆட்சியர், குல்தீப் சிங்கின் துப்பாக்கி உரிமங்களை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
இந்நிலையில், சீதாபூர் சிறை யில் உள்ள குல்தீப் சிங்கிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். - பிடிஐ