வதோதரா வெள்ளத்தில் அடித்து வரப்படும் முதலைகள்: குஜராத்தில் பொதுமக்கள் பீதி

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

அகமதாபாத்

குஜராத் மாநிலம் வதோதராவில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்துடன் முதலைகளும் அடித்து வரப்படுவதால் நகரவாசிகள் பீதியடைந்துள்ளனர்.

மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பிஹார், காஷ்மீர் உட்பட வட மாநிலங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது.

 குஜராத் மாநிலத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள வதோதரா நகரில் கடந்த 2 நாட்களாக வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், வதோதரா நகரில் பாயும் விஸ்வாமித்ரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், அங்கிருக்கும் முதலை
கள் நகருக்குள் வரத் தொடங்கியுள்ளன. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இரண்டு நாட்களில் மட்டும் அங்குள்ள தெருக்களில் சுற்றித்திரிந்த 7 முதலைகளை வனத்துறையினர் பிடித்துள்ளனர். மேலும், முதலைகளை பிடிப்பதற்காக 6 தனிப்படைகளை வனத்துறை அமைத்துள்ளது.

முதலைகள் நடமாட்டம் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கும்படி பொதுமக்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். - பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in