

ஸ்ரீநகர்:
அமர்நாத் யாத்திரை செல்லும் பாதையில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களில் நிலக்கண்ணி வெடி ஒன்றில் பாகிஸ்தான் துப்பாக்கித் தொழிற்சாலை அடையாளங்களும் அமெரிக்கத் தயாரிப்பு துப்பாக்கியும் இருந்ததையடுத்து இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் அமைதியைக் கெடுக்கும் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பயங்கரவாதிகள் தற்போது அமர்நாத் புனித யாத்திரையிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று லெப்டினண்ட் ஜெனரல் கன்வல்ஜீத் சிங் தில்லான் தெரிவித்தார்.
“அமர்நாத் யாத்திரைக்குச் செல்லும் இரட்டைப் பாதைகளான தெற்கு மற்றும் மத்திய காஷ்மீர் பாதையில்இன்னும் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பாதையில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் பாகிஸ்தான் துப்பாக்கித் தொழிற்சாலை அடையாளங்கள் கொண்ட நிலக்க்ண்ணிவெடி மற்றும் அமெரிக்க ரைஃபில் ஒன்றும் அடங்கும்.
அமர்நாத் யாத்திரைக்குச் செல்லும் நெடுஞ்சாலை மற்றும் நடைபாதை ஆகியவற்றில் முழு தேடல் வேட்டை நடத்தப்பட்டது” என்றார் கன்வல்ஜித் சிங்.
வியாழக்கிழமையன்று ஷோபியானில் நடத்தப்பட்ட தாக்குதலை வைத்துப் பார்க்கும் போது ஐ.இ.டி. பெரிய அச்சுறுத்தலாகியுள்ளது. கடந்த புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு சுமார் 10 ஐ.இ.டி. வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.