Published : 02 Aug 2019 12:53 PM
Last Updated : 02 Aug 2019 12:53 PM

வதோதரா பெரும்வெள்ளம்: குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து நாயை கடித்த முதலை; அலறியடித்த மக்கள்- வீடியோ 

வதோதரா

குஜராத் மாநிலம் வதோதரா நகரில் பெரும் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட முதலை ஒன்று வீடுகளில் சூழ்ந்த தண்ணீருக்குள் வந்தது. நாயை கடிக்க முயன்ற முதலையை இறுதியாக வனத்துறையினர் பிடித்தனர்.

நாட்டின் பல பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. வதோதராவில் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 
ஆறுகள் பெருக்கெடுத்து வரும் தண்ணீர் ஊருக்குள் புகுந்துள்ளது. 

இதையடுத்து, விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வதோதரா நகரத்தின் பல பகுதிகளிலும் வெள்ள நீர்சூழ்ந்துள்ளது. வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ள நீர் சூழ்ந்துள்ள இடங்களில் பேரிடர் மீட்புக் குழுவினர் சென்று வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். தண்ணீர், உணவு இன்றி மக்கள் தவித்து வருகின்றனர். குழந்தைகள் குடிக்க பாலும் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட முதலை ஒன்று ஊருக்குள் புகுந்தது. அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்குள் வந்த முதலை தண்ணீரில் இருந்து வெளியே வந்து நாய் ஒன்றை கடிக்க முயன்றது. வெள்ள நீருக்குள் முதலை இருப்பதை அப்போது தான் மக்கள் பார்த்தனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. 

இதையடுத்து அந்த முதலையை விரட்ட அந்த பகுதி மக்கள் பெரும் முயற்சி மேற்கொண்டனர்.

நீண்ட போராட்டத்துக்கு பிறகு வனத்துறையினர் விரைந்து வந்து முதலையை பிடித்து கொண்டு சென்றனர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x