Published : 02 Aug 2019 11:38 AM
Last Updated : 02 Aug 2019 11:38 AM

திரிபுரா உள்ளாட்சி தேர்தல்: பாஜக அபார வெற்றி

அகர்தலா

திரிபுராவில் கடந்த 27-ம் தேதி  உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பாஜக, இடதுசாரி கூட்டணி, காங்கிரஸ் ஆகியவை தனித்தனியாக போட்டியிட்டன. இந்த தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது. 

833 கிராம ஊராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் பாஜக 638 இடங்களை கைபற்றியது. காங்கிரஸ் 158 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 22 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. திரிபுரா மக்கள் முன்னணி 6 இடங்களிலும், சுயேச்சைகள் 9 இடங்களிலும் வெற்றுள்ளனர். 

116 மாவட்ட பஞ்சாயத்து இடங்களுக்கு நடந்த தேர்தலில் 114 இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது. 

35 ஒன்றியங்களில் உள்ள பஞ்சாயத்து வார்டுகளில் மொத்தம் 419 இடங்களுக்கு நடந்த தேர்தலில் 411 இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது. 

6111 ஊராட்சி இடங்களுக்கு நடந்த தேர்தலில் 5916 இடங்களில் பாஜக வென்றுள்ளது. மொத்தமாக அனைத்து இடங்களையும் கணக்கில் எடுத்தால் பாஜக 95 சதவீத வெற்றியை ஈட்டியுள்ளது. எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. இடதுசாரி கூட்டணியை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் 2-ம் இடம் பிடித்துள்ளது.

பாஜகவின் இந்த வெற்றியை அம்மாநில முதல்வர் பிப்லப் தேவ் குமார் பெருமிதத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

— Biplab Kumar Deb (@BjpBiplab) August 1, 2019

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x