

புதுடெல்லி
இந்திய கடற்படையில் பணி யாற்றி ஓய்வு பெற்ற குல்பூஷண் ஜாதவ், சொந்த வியாபார விஷய மாக ஈரான் சென்றபோது பாகிஸ் தானுக்கு கடத்தப்பட்டார். அவர் இந்தியாவுக்கு உளவு பார்த்ததாக கூறி பாகிஸ்தான் நீதிமன்றம் குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண் டனை விதித்தது. இதை எதிர்த்து இந்தியா தரப்பில் நெதர்லாந் தில் உள்ள சர்வதேச நீதி மன்றத் தில் வழக்கு தொடரப்பட்டது.
குல்பூஷணின் மரண தண்ட னையை சர்வதேச நீதிமன்றம் கடந்த மாதம் 17-ம் தேதி நிறுத்தி வைத்தது. மேலும், குல்பூஷண் ஜாதவை இந்திய தூதரக அதி காரிகள் பார்க்கவும், இந்தியா சார்பில் வழக்கறிஞர் வைத்துக் கொள்ளவும் அனுமதிக்க வேண் டும் என்றும் பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டது.
சர்வதேச நீதிமன்றத்தின் உத்தர வின்படி குல்பூஷண் ஜாதவை இந்திய அதி காரிகள் சந்திக்க வெள்ளிக் கிழமை (இன்று) அனுமதி வழங்கப் படும் என்று பாகிஸ்தான் வெளி யுறவுத்துறை செய்தித் தொடர் பாளர் முகமது பைசல் நேற்று இஸ்லாமாபாத்தில் அறிவித்தார். இது தொடர்பாக இந்திய தூதரகத் துக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளதாகவும் பதிலுக்கு காத்திருப்பதாகவும் கூறினார். இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பாகிஸ் தானுக்கு தூதரகம் மூலம் பதில் அளிக்கப்படும் என்று வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.