

சென்னை
சட்டம், ஒழுங்கு டிஜிபியாக நியமிக் கப்படவில்லை என்பதில் வருத்தம் இல்லை என்று ஓய்வு பெற்ற டிஜிபி ஜாங்கிட் தெரிவித்துள்ளார். ஓய்வு காலத்தில் புத்தகம் எழுதப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
கும்பகோணம் அரசு போக்கு வரத்து கழகத்தில் தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக பணி யாற்றி வந்த டிஜிபி எஸ்.ஆர். ஜாங்கிட், நேற்று முன்தினம் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர், 1985-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக காவல்துறையில் சேர்ந்தார்.
34 ஆண்டுகள் காவல் துறையில் பல்வேறு பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். தமிழகத்தை கதிகலங்க செய்த பவாரியா கொள்ளை கும்பலை ஒழித்தது, ரவுடிகளை என்கவுன்ட்டரில் சுட்டு வீழ்த்தியது இவரது சிறந்த பணியாக நினைவுகூரப்படுகிறது.
இந்நிலையில், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் ஜாங்கிட் நேற்று கூறியதாவது:
அமைதி நிலவ செய்தேன்
எனது பணிக் காலத்தில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் குற்றச் செயல்களை தடுத்து சட்டம், ஒழுங்கை நிலைநாட்டியுள்ளேன். குறிப்பாக கடலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஜாதி கலவரங்களை கட்டுப்படுத்தி அமைதி நிலவச் செய்தேன்.
இந்தப் பணி சவாலாக இருந்தது. கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கு உட்பட பல்வேறு கொள்ளை வழக்கில் தொடர்புடைய பவாரியா கொள்ளை கும்பலை கைது செய்தோம். வட மாநிலம் வரை சென்று அந்த கும்பலைச் சேர்ந்த 2 பேரை என்கவுன்ட்டர் செய்தோம்.
சென்னை புறநகர் காவல் ஆணையராகவும் சென்னை கூடு தல் காவல் ஆணையராகவும் இருந் தபோது ரவுடியிசத்தை ஒழித்து சட்டம், ஒழுங்கை நிலைநாட்டியுள் ளேன். குறிப்பாக வெள்ளை ரவி, பங்க் குமார் ஆகிய ரவுடிகளை என்கவுன்ட்டர் செய்துள்ளோம்.
அரசு ஆணையிட்ட அனைத்து பணிகளையும் திருப்திகரமாக செய்து முடித்துள்ளேன். இறுதி ஆண்டுகளில் எனக்கு சரியான பொறுப்புகள் வழங்கப்படவில்லை. சட்டம், ஒழுங்கு டிஜிபியாக நிய மிக்கப்படவில்லை என்பதில் வருத் தம் ஏதும் இல்லை. என்னுடன் பணி செய்த போலீஸார், ஒத்துழைப்பு அளித்த மக்களுக்கும் அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கி றேன்.
ஏற்கெனவே சில புத்தகங்களை எழுதியுள்ளேன். ஓய்வு காலத்திலும் புத்தகங்களை எழுதுவேன். மாண வர்களுக்கும், காவல்துறை பணிகளில் சேர விரும்புகிறவர் களுக்கும் பயிற்சி அளிக்கவும் திட்டமிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.