‘போக்சோ’ சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

‘போக்சோ’ சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
Updated on
1 min read

புதுடெல்லி

குழந்தைகளுக்கு எதிரான பாலி யல் வன்கொடுமையில் ஈடுபடுபவர் களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கவகை செய்யும் ‘போக்சோ’ சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேறியது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க ‘போக்சோ’ சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய் தது. அதன்படி, அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கும் வகை யில் சட்டத்திருத்தம் செய்யப்பட் டது. மேலும், சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்முறை, சிறார்களை வைத்து ஆபாச படங்கள் எடுப்பது ஆகியவற்றுக்கும் கடுமையான தண்டனையுடன் அபராதமும் விதிக்கும் வகையில் ‘போக்சோ’ சட்டத்தில் திருத்தங்கள் செய்யப் பட்டன.

இந்த சட்டத் திருத்த மசோ தாவை குழந்தைகள் மற்றும் பெண் கள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மாநிலங்களவையில் கடந்த வாரம் தாக்கல் செய்தார். கடந்த 29-ம் தேதி மாநிலங்களவையில் மசோதா நிறைவேறியது. இதைத் தொடர்ந்து மக்களவையில் நேற்று போக்சோ சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ‘‘இந்த மசோதாவுக்கும் ஓட்டு வங்கி அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. இது எதிர்கால இந்தியாவை காப்பதற்கான சட்டம்’’ என்றார்.

கட்சி வேறுபாடு இல்லாமல் எல்லா கட்சிகளைச் சேர்ந்த உறுப் பினர்களும் போக்சோ சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவு அளித்தனர். இதையடுத்து, மசோதா குரல் ஓட்டு மூலம் நிறை வேற்றப்பட்டது. இரு அவைகளி லும் மசோதா நிறைவேற்றப்பட் டதால் மசோதாவுக்கு நாடாளு மன்றத்தின் ஒப்புதல் கிடைத்துள் ளது. குடியரசுத் தலைவரின் ஒப்பு தலுக்குப் பிறகு சட்டம் அமலுக்கு வரும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in