முதல்முறையாக பெங்களூருவில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்: தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க உத்தரவு

முதல்முறையாக பெங்களூருவில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்: தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க உத்தரவு
Updated on
2 min read

இரா.வினோத்

பெங்களூரு

காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் கூட் டம் முதல்முறையாக பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. அப்போது தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க உத்தரவிடப்பட்டது.

காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் காவிரி நீர் ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உத்தரவிட்டது. இதையடுத்து மத்திய அரசு கடந்த ஆண்டு மத்திய நீர்வளத் துறை அதிகாரிகளின் தலைமையில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு, மேலாண்மை ஆணையம் அமைத்தது. இந்த இரு அமைப்புகளின் ஆலோ சனை கூட்டங்களும் பெங்களூருவில் நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல் வழங்கியபோதும், டெல்லியிலே கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டன.

இதையடுத்து, கடந்த மாதம் நடந்த காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத் தில் அடுத்த கூட்டத்தை பெங்களூரு வில் நடத்த வேண்டும் என தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. அதன்படி காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 12-வது கூட்டம் அதன் தலை வர் நவீன் குமார் தலைமையில் பெங் களூருவில் நேற்று நடைபெற்றது. தமிழக அரசின் சார்பில் நீர்வளத் துறை செயலாளர் பிரபாகர், கர்நாடகா சார்பில் ஜெயபிரகாஷ், கேரளா சார்பில் சம்சுதீன், புதுச்சேரி சார்பில் சுரேஷ் ஆகிய நீர்வள துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

சுமார் 2 மணி நேரம் நட‌ந்த இந்த கூட்டத்தில் கடந்த 25-ம் தேதி நடந்த 11-வது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு கள் குறித்தும், அவை பின்பற்றப்பட் டதா என்பது குறித்தும் விவாதிக்கப் பட்டது. மேலும் கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை யின் அளவு, அணைகளின் நீர் இருப்பு குறித்து திரட்டப்பட்ட புள்ளி விவரங் களின் அடிப்படையில் ஆலோசிக்கப் பட்டது.

அப்போது கர்நாடகா தரப்பில், ஜூன் 1-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரை தமிழகத்துக்கு 9.505 டிஎம்சி நீர் திறக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் கர்நாடகாவில் வழக்கத்தைவிட 40 சத வீதத்துக்கும் குறைவாக மழை பெய்து உள்ளது என தெரிவிக்கப்பட்டது. அதற்கு தமிழக அரசு அதிகாரிகள், 40.43 டிஎம்சி நீர் திறக்க வேண்டிய நிலை யில் கர்நாடகா குறைந்த அளவிலே நீரை திறந்திருப்பதாகத் தெரிவித்தனர்.

அப்போது காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் தலைவர் நவீன் குமார், ''கர்நாடகாவின் மழைப் பொழிவின் அடிப்படையில் கடந்த மாதத்தில் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து தமிழகத்துக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. இதே போல அடுத்த 5 நாட்களுக்கும் கர்நாடக அரசு கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளின் நீர்வரத்தை கணக்கில் கொண்டு, அதனைப் பொறுத்து தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும்'' என வலியுறுத்தினார். இதையடுத்து அடுத்தக் கூட்டம் டெல்லி யில் வருகிற 8-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in