Published : 02 Aug 2019 07:01 AM
Last Updated : 02 Aug 2019 07:01 AM

மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் மருத்துவ ஆணைய மசோதா நிறைவேறியது: நெக்ஸ்ட் தேர்வு அடிப்படையில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கு சேர்க்கை

புதுடெல்லி

மக்களவையைத் தொடர்ந்து தேசிய மருத்துவ ஆணைய மசோதா மாநிலங்களவையிலும் நேற்று நிறைவேறியது.

இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தின் (1956) கீழ் இந்திய மருத் துவ கவுன்சில் (எம்சிஐ) செயல் பட்டு வருகிறது. இதில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாகக் கூறப் படுகிறது. குறிப்பாக எம்சிஐ பல் வேறு ஊழலுக்கு வழிவகுப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.

எனவே, இந்த கவுன்சிலை கலைத்து விட்டு புதிய அமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது. இதற்காக தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை தயாரித்துள்ளது. இந்த மசோதா மருத்துவத் துறையில் மிகப்பெரிய சீர்திருத்தமாக இருக்கும் என மத் திய அரசு கருதுகிறது.

குறிப்பாக, மருத்துவக் கல்வி யின் தரம் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக அமைய இந்த மசோதா வழி வகை செய்கிறது. இதன்படி, எம்பிபிஎஸ் படிப்பின் இறுதி ஆண் டில் பொதுத் தேர்வு நடத்தப்படும். நேஷனல் எக்சிட் டெஸ்ட் (நெக்ஸ்ட்) என அழைக்கப்படும் இந்தத் தேர் வின் அடிப்படையில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை யும் நடைபெறும். மருத்துவராக பணி யாற்றுவதற்கான உரிமம் பெறவும் இந்தத் தேர்வு உதவும். இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்காக இப்போது நடத்தப்படும் நீட் தேர்வில் எவ்வித மாற்றமும் இருக்காது.

இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது நடைபெற்ற விவாதத்தின்போது எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரி வித்தன. ஆனாலும், கடந்த 29-ம் தேதி இந்த மசோதா குரல் வாக் கெடுப்பு மூலம் நிறைவேற்றப் பட்டது.

இதையடுத்து, இந்த மசோதா வுக்கு இந்திய மருத்துவ சங்கமும் (ஐஎம்ஏ) கடும் எதிர்ப்பு தெரிவித் துள்ளது. நாட்டின் பல்வேறு புகுதி களில் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 நாட்களாக மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த மசோதா ஏழைகள் மற்றும் மாணவர்களின் நலனுக்கு எதிராக உள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இந்நிலையில், தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மாநிலங்களவையில் தாக்கல் செய் தார். இதன் மீதான விவாதத்தை அவர் நேற்று தொடங்கி வைத்து பேசும்போது, “மருத்துவக் கல்வித் துறையில் மிகப்பெரிய சீர்திருத்த மாக இந்த மசோதா விளங்கும். கடந்த பல ஆண்டுகளாக மருத்துவ கவுன்சிலில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றதாக புகார்கள் எழுந் தன. 2010-ல் இந்தக் கவுன்சிலின் அதிகாரிகள் சிலர் கைது செய்யப் பட்டனர். மாணவர்களுக்கு எந்த விதத்திலும் தொந்தரவாக இருக் காது. தேசிய மருத்துவ ஆணை யத்தில் 21 மருத்துவர்கள் உட்பட 25 உறுப்பினர்கள் இடம் பெறு வார்கள்.

இளநிலை மருத்துவம், முது நிலை மருத்துவம் ஆகியவற்றுக்கு தனித்தனியாக வாரியம் அமைக் கப்படும். மருத்துவர்களால் எழுப் பப்படும் அச்சங்களுக்கு தீர்வு காணப்படும்” என்றார்.

காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜெய் ராம் ரமேஷ், குலாம் நபி ஆசாத், அதிமுக உறுப்பினர் விஜிலா சத்யா னந்த், பிஜு ஜனதா தளம் உறுப் பினர் சாஸ்மித் பத்ரா, திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் சாந்தனு சென், ஆர்ஜேடி உறுப்பினர் மனோஜ் குமார் ஜா, திமுக உறுப் பினர் திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் கே.கே.ராகேஷ், ஆம் ஆத்மி உறுப்பினர் எஸ்.கே.குப்தா உள்ளிட்டோர் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.

போலி மருத்துவர்களை உரு வாக்கவும் மருத்துவக் கல்விக் கட்டணம் உயரவும் இந்த மசோதா வழிவகுக்கும் என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். குறிப்பாக, மருத் துவம் படிக்காத சுமார் 3.5 லட்சம் பேருக்கு உரிமம் வழங்கி நவீன மருத்துவ சேவையில் ஈடுபடுத்த இந்த மசோதா வகை செய்வதாக வும் குற்றம்சாட்டினர்.

இதற்கு பதில் அளிக்கும் வகை யில் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பேசும் போது, “நாடு முழுவதும் மருத் துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள சுமார் 80 ஆயிரம் இடங்களில் 40 ஆயிரம் இடங்கள் அரசு மருத் துவ கல்லூரிகளில் உள்ளன. தனி யார் வசம் உள்ள 40 ஆயிரம் இடங் களில் 50 சதவீத இடங்களுக்கான கட்டணமும் அரசால் நிர்ணயிக்கப் படும். எனவே, கல்விக் கட்டணம் அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக் கும். மேலும், போலி மருத்துவர்கள் உருவாவதைத் தடுக்க இந்த மசோதாவில் வழிவகை செய்யப் பட்டுள்ளது. இதுபோன்ற செயலில் ஈடுபடுவோருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்” என் றார்.

இறுதியில், குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற் றப்பட்டது. அப்போது அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய் தனர். எனினும், இந்த மசோதாவில் 2 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ள தால், மீண்டும் மக்களவையின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x