குஜராத்தில் கனமழை: வதோதராவில் ரயில், விமானப்போக்குவரத்து கடும் பாதிப்பு

வதோதராவில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள  தேசிய பேரிடர் மீட்பு படையினர்
வதோதராவில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர்
Updated on
2 min read

வதோதரா

நாட்டின் பல பகுதிகளிலும் மீண்டும் தென்மேற்கு பருவமழை தீவிரடைந்துள்ளது. வதோதராவில் பெய்து கொட்டித்தீ்ர்த்து வரும் மழையால் ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து முடங்கியுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்னர். 

நாட்டின் பல பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கனமழையால் காஷ்மீர், உத்தர பிரதேசம், பிஹார், அசாம் உட்பட பல மாநிலங்களிலும் கடந்த சில தினங்களுக்கு மன்பு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக மும்பையில் பெய்த மழையயால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் தண்ணீர் சூழ்ந்தது. 

வெளியில் நிறுத்தி வைக்கப்பட்ட கார்களும் கூட தண்ணீரில் மூழ்கின.சில நாட்கள் ஓய்ந்திருந்த மழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. வதோதராவில் அமைந்துள்ள விமான நிலைய ஓடுபாதையிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. 

இதையடுத்து, விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள இடங்களில் பேரிடர் மீட்புக் குழுவினர் சென்று வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 

மீட்பு பணிகளை விரைவுபடுத்த முதல்வர் விஜய் ரூபானி தலைமையில் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. இதனிடையே வரும் சனிக்கிழமை வரை குஜராத்தில் பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

இதுபோலவே பஞ்சாப், ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. காஷ்மீரில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in