முத்தலாக் மசோதா நிறைவேற்றத்துக்கு பிறகு அமித் ஷாவின் அடுத்த குறி ‘மிஷன் காஷ்மீர்’- ஆகஸ்ட் 15-ல் அனைத்து கிராமங்களிலும் தேசியக்கொடி ஏற்ற திட்டம்

முத்தலாக் மசோதா நிறைவேற்றத்துக்கு பிறகு அமித் ஷாவின் அடுத்த குறி ‘மிஷன் காஷ்மீர்’- ஆகஸ்ட் 15-ல் அனைத்து கிராமங்களிலும் தேசியக்கொடி ஏற்ற திட்டம்
Updated on
2 min read

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி

முத்தலாக் தடை மசோதாவை இரு அவைகளிலும் தாக்கல் செய்து வெற்றி பெற்ற பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ‘மிஷன் காஷ்மீர்’ திட்டத்தை வகுத் துள்ளார்.

இந்தியாவின் எந்த மாநிலமும் பெறாத சிறப்பு அந்தஸ்து ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 370-ன்படி கிடைத்து வருகிறது. இதை அகற்றி ஜம்மு-காஷ்மீரையும் மற்ற மாநிலங் களை போல் மாற்றுவோம் என பாஜக தனது தேர்தல் அறிக்கை யில் கூறியிருந்தது.

எனவே, இதை முத்தலாக் மீதான தடை சட்ட மசோதாவில் கிடைத்த வெற்றியை அடுத்து மத்திய அமைச்சர் அமித்ஷா ‘மிஷன் காஷ்மீர்’ எனும் பெயரில் நிறைவேற் றத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இதன் முன்னேற்பாடாகத்தான் அம்மாநிலத்திற்கு கடந்த சில வாரங்களில் சுமார் 12,000 பாதுகாப்பு படையினர் கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த படையினர் எண்ணிக்கை, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது வெகுவாகக் குறைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அமித் ஷா ஆகஸ்ட் 15-ம் தேதி முக்கிய பணியை மேற்கொள்ள திட்டமிட் டுள்ளார். இதில், காஷ்மீரில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சியை அனைத்து கிராமங்களிலும் நடத்த முடிவு செய்துள்ளார். இந்நிகழ்ச்சி காஷ்மீரின் கிராமங்களிலும், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் பல வருடங்களாக நடப்பதில்லை. இதற்கு அங்குள்ள பிரிவினை வாதிகள் மற்றும் தீவிரவாதிகள் எதிர்த்து வருவதே காரணம் ஆகும். இவர்கள் காட்டும் எதிர்ப்பு களுக்கு அஞ்சி அங்குள்ள பொது மக்களும் கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வ தில்லை. தங்கள் வீட்டுப்பிள்ளை களையும் ஆகஸ்ட் 15-ம் தேதி கல்வி நிலையங்களுக்கு அனுப்பு வதில்லை என்று கூறப்படுகிறது. அரசு விழாக்கள் நடைபெறும் மாவட்ட தலைமையகங்களில் மட் டும் கொடியேற்றும் நிகழ்ச்சி வழக்கம்போல் நடைபெறுகிறது.

இவ்வாறு அல்லாமல், இந்த வருடம் காஷ்மீரின் அனைத்து கிராமங்களிலும் அதன் பஞ்சாயத்து தலைவர்களால் கொடியேற்றும் நிகழ்ச்சியை ஆகஸ்ட் 15-ல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக, காஷ்மீர் வந்த அமித்ஷா, அங்கு தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் பஞ் சாயத்து தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்தி உள்ளார். தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலும் ஜம்மு-காஷ்மீர் மாநில மற்றும் மத்திய படைகளின் உளவுத் துறை அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தி இருந்தார்.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் காஷ்மீரின் உருது மொழி பத்திரிகையாளர் வட்டாரம் கூறும்போது, ‘இங்கு சமீபத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலை முக்கிய அரசியல் கட்சிகள் புறக் கணித்ததால் மிகவும் குறைந்த வாக்கு சதவிகிதம் பதிவானது. இத னால், பெரும்பாலான கிராமங் களின் பஞ்சாயத்து தலைவராக பாஜகவினரே வென்றுள்ளனர். இதேபோன்ற ஒரு நிலையை ஆகஸ்ட் 15-ம் தேதி உருவாக்கி சட்டப்பேரவை தேர்தலையும் மக் கள் புறக்கணிக்கும் நிலையில் ஆட்சியை பிடிக்க பாஜக திட்ட மிடுகிறது’ எனத் தெரிவித்தனர்.

இதனிடையே, ஆகஸ்ட் 15 கொடியேற்றத்தின் மூலம் காஷ் மீரில் ஏற்படும் தாக்கத்தை பொறுத்து அங்குள்ள பிரிவு 370-ஐயும் நீக்குவதற்கு மத்திய அரசு முயற்சி எடுக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in