

என்.மகேஷ்குமார்
ஹைதராபாத்
முத்தலாக் தடை மசோதா நிறை வேற்றப்பட்டதால் ஹைதராபாத் தில் பிரதமர் மோடியின் படத் துக்கு முஸ்லிம் பெண்கள் பாலாபி ஷேகம் செய்து இனிப்பு வழங் கினர்.
முத்தலாக் தடை மசோதா மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறை வேறியுள்ளது. இதையடுத்து டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் மற்றும் அமைச்சர் கோயலின் இல்லத் தில் முஸ்லிம் பெண்கள் பலர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை தெரி வித்தனர். இதேபோல் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். இதில் பல இடங்களில் முஸ்லிம் பெண் களும் கலந்து கொண்டு இனிப்பு வழங்கியும், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டும் வருகின்றனர்.
இந்நிலையில் ஹைதராபாத் தில் பாஜக சிறுபான்மையினர் அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் பிரதமர் மோடியின் படத்தை அபிட்ஸ் பகுதியில் ஊர்வலமாக கொண்டுசென்று கொண்டாடினர். அப்போது இதில் கலந்துகொண்ட முஸ்லிம் பெண்கள் மோடியின் படத்துக்கு பாலாபிஷேகம் செய்து இனிப்புகளை வழங்கினர்.
இந்த மசோதா முஸ்லிம் பெண் களுக்கு பாதுகாப்பு அளித்துள்ள தாக பெண்கள் தெரிவித்தனர்.