

லக்னோ
உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் முகமது அலி ஜாவ்ஹர் பல்கலைக்கழகம் உள்ளது. இதை நிறுவிய சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஆசம் கான், பல்கலை.யின் துணைவேந்தராகவும் உள்ளார்.
ராம்பூரில் உள்ள 250 ஆண்டுகள் பழமையான ஓரியண்டல் கல்லூரியில் ஆயிரக்கணக்கான பழங்கால, அரிய புத்தககங்கள் திருடப்பட்டதாக அக்கல்லூ ரியின் முதல்வர் ஜூபைர் கான் கடந்த மாதம் புகார் அளித்தார். திருடப்பட்ட புத்தகங்கள் ஆசம் கான் நிறுவிய பல் கலைக்கழகத்தில் இருப்பதாக போலீஸா ருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த செவ்வாய்கிழமையன்று பல் கலைக்கழகத்தில் போலீஸார் சோதனை நடத்தினர். நேற்றும் சோதனை தொடர்ந் தது. பல்கலை.நூலகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான திருடப்பட்ட அரிய புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.