

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நடைபெறும் பந்த் காரணமாக இடுக்கியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தின் அளவை 136 அடியாக குறைத்து கேரள அரசு நிறைவேற்றிய அணை பாதுகாப்புச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
இதனை எதிர்த்து கேரளாவில் மாநிலம் தழுவிய பந்த்துக்கு முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு நடவடிக்கை குழு என்ற அமைப்பு அழைப்பு விடுத்தது.
கேரளாவின் பிற மாவட்டங்களில் பந்த் தாக்கம் அதிக அளவில் இல்லாவிட்டாலும், இடுக்கியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குமுளி, சப்பத் பகுதியில் கடைகள் முற்றிலும் அடைக்கப்பட்டுள்ளன. அணைக்கு அருகில் இருக்கும் பகுதியில் போராட்டக்காரர்கள் குவிந்ததால் அணை பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பெரிய கட்சிகள் பந்த்துக்கு ஆதரவு தெரிவிக்காவிட்டாலும், ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணி ஓரளவுக்கு ஆதரவு அளித்துள்ளது.
மகாத்மா காந்தி, கோழிக்கோடு, கொச்சின் பல்கலைக்கழகங்கள் இன்று நடைபெற இருந்த தேர்வுகளை ரத்து செய்துள்ளது.