

புதுடெல்லி
மோட்டார் வாகனங்கள், பாகங் களில் மைக்ரோபுள்ளிகள் (கண் ணுக்குத் தெரியாத சிறிய அள விலான புள்ளிகள்) அமைக்க வகை செய்யும் வரைவுக் கொள்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
இதுதொடர்பான வரைவுக் கொள்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ் சாலைத்துறை அமைச்சகம் கடந்த 24-ம் தேதி வெளியிட்டுள்ளது. அந்த வரைவுக் கொள்கையில் கூறியிருப்பதாவது:
மோட்டார் வாகன விதிகளை அண்மையில் மத்திய அரசு திருத்தியுள்ளது. இதன்மூலம் மோட்டார் வாகனங்களிலும், அதன் பாகங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களிலும் நிரந்தரமான மற்றும் கண்ணுக்குத் தெரியாத அளவில் மைக்ரோ புள்ளிகள் அமைக்கப்படும். இந்த புள்ளிகளை மைக்ரோஸ்கோப் மூலம் மட்டுமே படிக்க முடியும். மேலும் புற ஊதாக் கதிர்களை மைக்ரோபுள்ளிகளின் மேல் செலுத்துவதன் மூலமும் இதைப் படிக்க முடியும்.
இந்த மைக்ரோபுள்ளிகளை வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்களில் அமைப்பதன் மூலம் ஒரு பிரத்யேக அடையாளத்தை ஏற்படுத்த முடியும். இதன்மூலம் வாகனத் திருட்டு அல்லது போலியான உதிரிபாகங்கள், வாகனங்கள் உருவாக்குவதைத் தடுக்க முடியும். இதற்காகவே இந்த மைக்ரோபுள்ளிகள் தொழில் நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மைக்ரோபுள்ளிகளை வாகனத்திலிருந்து நீக்க முடியாது. வாகனங்களை முழுவதுமாக சேதப்படுத்தினால் மட்டுமே அதை நீக்க முடியும்.
இந்த வரைவுக் கொள்கை தொடர்பான கருத்துகள், ஆட் சேபங்களை அடுத்த 30 நாட் களுக்குள் பொதுமக்கள் தெரி விக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. - பிடிஐ