Published : 31 Jul 2019 09:10 AM
Last Updated : 31 Jul 2019 09:10 AM

அமர்நாத் யாத்திரை 3 லட்சம் பேர் பனி லிங்க தரிசனம்

ஜம்மு

அமர்நாத் யாத்திரையில் இது வரை 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பனி லிங்கத்தை தரிசித்துள்ளனர்.

காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசிப்பதற்கான அமர்நாத் யாத்திரை கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கியது. ஜம்முவில் இருந்து பக்தர்கள் குழுக்களாக சென்று பனி லிங்கத்தை தரிசித்து வருகின்றனர். கடந்த திங்கட்கிழமை மாலை வரை 3 லட்சத்து 21 ஆயிரத்து 410 பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, ஜம்முவில் பகவதிநகர் அடிவார முகாமில் இருந்து நேற்று காலை 1,175 பக்தர்கள் அமர்நாத்துக்கு புறப்பட்டனர். பஹல்காம், பால்டால் ஆகிய இரு பாதைகள் வழியே பலத்த பாதுகாப்புடன் 47 வாகனங்களில் இக்குழுவினர் சென்றனர். 46 நாட்கள் நடக்கும் அமர்நாத் யாத்திரை ரக் ஷா பந்தன் தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி நிறைவடைகிறது.
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x