

லக்னோ
உத்தரபிரதேசத்தில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள பாஜக எம்எல்ஏவை ஏற்கெனவே கட்சியி லிருந்து நீக்கி விட்டோம் என அம்மாநில பாஜக தலைவர் தெரி வித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் மீது, உன்னாவ் மாவட்டத் தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் 2 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் பலாத்கார புகார் கூறினார். இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப் பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குல்தீப் சிங் சிறையில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண், அவரது வழக்கறிஞர் மற்றும் குடும்பத்தினருடன் கடந்த 28-ம் தேதி காரில் பயணம் செய்துள்ளனர். அவர்கள் சென்ற கார் மீது லாரி மோதியது. இதில் அந்த இளம்பெண்ணும் அவரது வழக்கறிஞரும் படுகாயமடைந்தனர். அவரது குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதனிடையே, இந்த விபத்து தற்செயலானது இல்லை என்றும், குல்தீப் சிங்கின் சதித் திட்டம் என்றும் அந்த இளம்பெண்னின் குடும்பத்தினர் புகார் செய்தனர்.
வழக்கை வாபஸ் பெறுமாறும் இல்லாவிட்டால் உயிருடன் இருக்க முடியாது என்றும் இளம் பெண்ணுக்கு குல்தீப் சிங்கின் ஆதரவாளர்கள் தொடர்ந்து மிரட்டல் விடுத்தது தெரியவந்துள் ளது. இதுகுறித்து போலீஸில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என்றும் அதற்கான ஆதாரம் இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை
இதையடுத்து, குல்தீப் சிங் உட்பட 10 பேர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் நேற்று முன்தினம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிபிஐ விசாரணைக்கும் மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது.
நாடாளுமன்ற இரு அவைகளி லும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேற்று இந்தப் பிரச்சினையை எழுப்பி அமளியில் ஈடுபட்டன. அப்போது, இந்த விவ காரத்தில் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், குல்தீப் சிங் செங்கரை பாஜகவிலிருந்து நீக்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து உத்தரபிரதேச பாஜக தலைவர் ஸ்வதந்தர தேவ் சிங் நேற்று கூறும்போது, “குல்தீப் சிங்கை ஏற்கெனவே கட்சியிலிருந்து நீக்கி விட்டோம். மாநில அரசும் எங்கள் கட்சியும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதர வாக இருந்து வருகிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை” என்றார்.
இதனிடையே, துணை முதல்வர் தினேஷ் சர்மா நேற்று கேஜிஎம்யு மருத்துவமனைக்கு சென்று, அங்கு இளம்பெண்ணுக்கு அளிக்கப் பட்டு வரும் சிகிச்சை பற்றி கேட் டறிந்தார். பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் கூறும்போது, “குல்தீப் சிங்கை ஏற்கெனவே இடைநீக்கம் செய்துவிட்டோம். இளம்பெண்ணுக்கு சிறந்த முறை யில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.
இதனிடையே சிகிச்சை பெற்று வரும் இருவருடைய உடல்நிலையிலும் எந்த முன்னேற்றமும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணுடன் காரில் பயணித்த அவரது அத்தை உயிரிழந்தார். உயிரிழந்த பெண்ணின் கணவரும் பாதிக்கப்பட்ட பெண்ணின் மாமாவுமான மகேஷ் சிங் வேறு ஒரு வழக்கில் சிறையில் உள்ளார். இந்நிலையில், மனைவியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க மகேஷுக்கு பரோல் வழங்க அலகாபாத் உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது.
- பிடிஐ