காங்கிரஸில் இருந்து கர்நாடக எம்எல்ஏ.க்கள் 14 பேர் நீக்கம்

காங்கிரஸில் இருந்து கர்நாடக எம்எல்ஏ.க்கள் 14 பேர் நீக்கம்
Updated on
1 min read

கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் உட்பட 14 எம்எல்ஏக்கள் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவில் சமீபத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தின்போது காங்கிரஸ் கட்சியின் 13 எம்எல்ஏக்கள், மஜத கட்சியின் 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். இவர்களையும் சுயேச்சை ஒருவரையும் சேர்த்து மொத்தம் 17 எம்எல்ஏ.க்களை சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்தார். பெரும்பான்மை இல்லாத நிலையில், குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசு கவிழ்ந்து, எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது.

இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப் பட்ட காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிஹோளி, மகேஷ் குமட்டஹள்ளி, ரோஷன் பெய்க், மந்த் பாட்டீல் உட்பட 14 பேர் அக்கட்சியில் இருந்து நேற்று நீக்கப்பட்டனர். இவர்களில் மந்த் பாட்டீல் ராஜினாமா செய்யவில்லை என்றபோதும் கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதற்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக 14 எம்எல்ஏ.க் களும் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in