Published : 30 Jul 2019 06:29 PM
Last Updated : 30 Jul 2019 06:29 PM

தினந்தோறும் 6 பலாத்காரம், 8 பாலியல் அத்துமீறல்: டெல்லியில் பெண்களுக்கு எதிராக தொடரும் அவலம்

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் நாள்தோறும் பெண்களுக்கு எதிராக 6 பலாத்கார வழக்குகள், 8 பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் என்கிற கணக்கில் இந்த ஆண்டு ஜூலை வரை குற்றச்சம்பவங்கள்  நடந்துள்ளன என்று டெல்லி போலீஸார் தெரிவிக்கின்றனர்.

2019-ம் ஆண்டில் ஜூலை மாதம் வரை ஒட்டுமொத்தமாக 1,176 பாலியல்பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 7-ம் ஆண்டுக்கு முன் டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொல்லப்பட்ட பின்பும், நாடுமுழுவதும் கொந்தளித்து எதிர்ப்புத் தெரிவித்த பின்பும் டெல்லியில் இன்னும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறையவில்லை.

இந்த சம்பவத்துக்குப்பின் பலாத்காரம், பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக கடும் சட்டங்கள் கொண்டுவந்தபோதிலும், குற்றங்கள் குறையவில்லை.

டெல்லி ஜங்புரா பகுதியில் வசிக்கும் 30 வயதான ஸ்வேதா மேத்தா நாள்தோறும் குருகிராமில் உள்ள நிறுவனத்தில் பணிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்புகிறார். அவர் கூறுகையில், " இரவுநேரத்தில் டெல்லியில் பெண்கள் தனியாகப் பயணிப்பது கடினமாக இருக்கிறது. இரவு நேரத்தில் பெரும்பாலான இடங்களில் போலீஸார் இருப்பதில்லை.

அரசுப்பேருந்தில் வீட்டுக்கு திரும்பும்போது, என் நண்பர்கள், உறவினர்கள், பெற்றோருக்கு தகவல் தெரிவித்துவிட்டுதான் வருவேன். எந்த அசம்பாவிதமும் நடந்துவிடக்கூடாது அல்லவா" எனத் தெரிவித்தார்


 
டெல்லி போலீஸாரின் புள்ளி விவரங்கள்படி, கடந்த ஆண்டு மட்டும் டெல்லியில் நடந்த பலாத்காரங்களில் 43 சதவீதம் உறவினர்கள், நண்பர்களால் நடந்துள்ளது. 16.25 சதவீதம் அண்டை வீட்டார் மூலமும், 12.04 சதவீதம் உறவினர்கள் மூலமும், 2.89 சதவீதம் சக ஊழியர்கள் மூலமும், 22.86 சதவீதம் அடையாளம் தெரியாத நபர்களாலும் நடந்துள்ளது. இதில் 2.5 சதவீதம் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களால் கண்டுபிடிக்க முடியவி்ல்லை. 

டெல்லியில் பலாத்காரங்கள் 2016-ம் ஆண்டோடு ஒப்பிடும்போது 2017-ம் ஆண்டில் குறைந்தது என்றாலும் எதிர்பார்த்த அளவு இல்லை. கடந்த ஆண்டு 1,780 பாலியல் துன்புறுத்தல் வழக்குகளும், இந்த ஆண்டு ஜூலை  வரை 1,589 வழக்குகளும் பதிவாகியுள்ளன. கடந்த 2017-ம் ஆண்டு முழுவதும் 3,422 வழக்குகள் பதிவாகின. 

நிர்பாயா வழக்கில் தீர்ப்பு கிடைத்தபின், பெண்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தாங்கள் பாலியல் சீண்டல், துன்புறுத்தல், பலாத்காரம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டால் துணிச்சலாக வெளியே வந்து  புகார் அளிக்கிறார்கள். பெண்களுக்கு நம்பிக்கை, துணிச்சல் அதிகரித்துள்ளது. அதற்கு முன் பெண்களிடம் இந்த துணிச்சல் இல்லை என்பதால்தான் அதிகமான அளவு பலாத்காரங்கள் நடந்தது என்று  போலீஸார் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x