

புதுடெல்லி
ஒரு குறிப்பிட்ட பகுதியில் தனித்துவமாக தயாரிக்கப்படும் பொருளுக்கோ அல்லது தனித்துவ மாக விளையும் பொருளுக்கோ மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கி வருகிறது. குறிப்பிட்ட உற்பத்திப் பொருள் முறையாக பாரம்பரிய ரீதியில் தயாரிக்கப்பட்ட தற்கும், தரத்தைக் காப்பதற்குமான சான்றாகவும் இது உள்ளது.
இந்நிலையில் ஒடிசாவில் தயா ராகும் பிரபலமான இனிப்புப் பண்டமான ரசகுல்லாவுக்கு புவிசார் குறியீடு கேட்டு ஒடிசா மாநில அரசு, மத்திய அரசிடம் 4 ஆண்டுகளுக்கு முன்னர் விண்ணப் பித்திருந்தது. அதற்கு தற்போது புவிசார் குறியீடை மத்திய அரசு வழங்கியுள்ளது. முன்னதாக பெங்கால் ரசகுல்லாவுக்கு புவிசார் குறியீடு கேட்டு மேற்கு வங்க அரசும் விண்ணப்பித்திருந்தது. ஆனால் பல்வேறு ஆவணங்களை ஒப்பிட்டு பார்த்த பிறகு ஒடிசாவுக்கு புவிசார் குறீயீட்டை மத்திய அரசு வழங்கியுள்ளது.
- பிடிஐ