Published : 29 Jul 2019 07:28 PM
Last Updated : 29 Jul 2019 07:28 PM

டாக்டர்.ஹர்ஷவர்தன் செய்த அறுவை சிகிச்சையில் நோயாளி மரணம்: சிலேடையுடன் ஆ.ராசா.எம்.பி விமர்சனம்

புதுடெல்லி

மத்திய மருத்துவநலத்துறை அமைச்சர் டாக்டர்.ஹர்ஷவர்தன் செய்த அறுவை சிகிச்சையில் நோயாளி மரணம் என திமுக எம்.பி சிலேடையுடன் விமர்சித்தார். இதை அவர் மக்களவையில் இன்று தாக்கல் செய்த தேசிய மருத்துவ மசோதா 2019 மீதான விவாதத்தில் பேசினார்.

இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும் நீலகிரி தொகுதி எம்.பியுமான ஆர்.ராசா பேசியதாவது: டாக்டர்.ஹர்ஷவர்தன் செய்த அறுவை சிகிச்சையில் நோயாளி மரணித்துவிட்டார் என்பதை இந்த அவைக்கு தெரிவிக்க விரும்புகின்றேன். நான் இதனை விளக்குகிறேன்.

சார் சுகாதாரம் என்பது மாநில பட்டியலில் உள்ளது. மருத்துவ கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ளது. எந்த ஒரு அரசியல்சாசன விழுமியங்களும் இல்லாமல் இந்த மசோதா அவையில் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஏழைக்கு எதிராகவும், மக்களாட்சி தன்மை இன்றியும், சமூகநீதிக்கு எதிரானதாகவும், கூட்டாட்சிக்கு எதிரானதாகவும் இந்த மசோதா இருப்பதை நான் விளக்குகிறேன். இந்திய மருத்துவ கழகத்திற்கு என்ன செய்யப்பட்டுள்ளது?

நீங்கள் மசோதாவை பிடுங்கி விட்டீர்கள். அதற்கு மாற்றாக நீங்கள் ஆணையத்தை கொண்டு வந்துள்ளீர்கள். ஆனால் நீங்கள் எவ்வாறு ஊழலை ஒழிக்க போகின்றீர்கள்? இந்திய மருத்துவ கழகம் ஒரு ஜனநாயக அமைப்பாகும்.

அதில் தேர்வு செய்யப்பட்ட மருத்துவ சகோதரர்கள் தங்களது கருத்துக்களை வைப்பார்கள். நாட்டில் ஜனநாயகம் இருக்க வேண்டும். ஜனநாயகம் என்றால் என்ன? எங்களுடைய தலைவர் டாக்டர் கருணாநிதி, ’ஜனநாயகம் என்பது சமூக பொருளாதாரத்தில் கீழ் நிலையில் இருப்பவர்களின் ஆசைகள் அரசாங்கத்தில் எதிரொலிக்க வேண்டும்’ என்பார்.

ஆட்சி முறை எங்கே இருக்கின்றது? நீங்கள் மூன்று அமைப்புக்களை உருவாக்குகின்றீர்கள். ஒன்று மருத்துவக்குழு,

இரண்டாவது ஆலோசனை வாரியம். பிறகு சில குழுக்கள். ஆகவே மூன்றடுக்கு முறை.

அதாவது 80 முதல் 90 சதவிகித உறுப்பினர்களை அரசாங்கம் நியமிக்க உள்ளது. மேலும் தேர்தல் இருக்காது. இது என்ன? நீங்கள் இவ்வாறு செய்வதால் ஊழலை ஒழிக்க போகின்றீர்களா? அனைத்து உறுப்பினர்களையும் மத்திய அரசாங்கம் அமைக்க உள்ளது. அங்கே தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இருக்கப்போவது இல்லை.

நான் இதனை இவ்வாறாக விளக்குகின்றேன் இந்த குழுவில் எத்தனை உறுப்பினர்கள்? ஒரு தலைவர், எய்ம்ஸ், ஐசிஎம்ஆர், பிஜிஐஎம்ஐஆர் மற்றும் ஜிப்மரில் இருந்து 10 உறுப்பினர்கள், நல்லது. நான்கு பேரை அரசாங்கம் நியமிக்கும். நாடு முழுவதும் உள்ள துணைவேந்தர்கள்.

ஆனால் எவ்வளவு துணைவேந்தர்கள் இருப்பார்கள்? ஆறு துணைவேந்தர்கள் மட்டும்தான். சுழற்சி முறையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு தான் வரும். தமிழ்நாட்டிற்கு ஒரு துணைவேந்தர் என்றால் தமிழ்நாடு மீண்டும் 12 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். பிறகு மாநில மருத்துவக்குழுக்கள்.

மாநில மருத்துவக்குழுவில் இருந்து எத்தனை பேர் இருப்பார்கள்? 29 மாநிலங்களில் வெறும் ஐந்துதான். மாநிலத்தில் இருந்து ஒரு நபர் அங்கு செல்ல எவ்வளவு காலம் எடுக்கும்? 14 ஆண்டுகள் ஆகும். ஆகவே அனைத்து உறுப்பினர்களையும் அரசாங்கம் நியமிக்க உள்ளது. தேர்தல் முறையில் அல்ல.

இப்போது இரண்டாவது வாரியத்தை பார்க்கலாம். இது மற்றொரு ஆலோசனை வாரியம். இது ஒரு நகைச்சுவை. எப்படி? இந்திய மருத்துவ கழகத்தில் எத்தனை உறுப்பினர்கள் இருப்பார்கள். அதாவது 10 +1+3+25 உறுப்பினர்கள். ஆலோசனை குழுவில் 89 உறுப்பினர்கள். இது இரண்டாவது குழு.

ஆட்சியர், துணை ஆட்சியர் மற்றும் தாசில்தார். இதுதான் நடைமுறை. வாரியம் உருவாக்கப்பட்டுள்ளது. எவ்வளவு ஆட்சியர்கள் அதில் உறுப்பினர்களாக இருப்பார்கள். அது 25. இப்போது துணை ஆட்சியர்களுக்கு வரலாம்.

89 உறுப்பினர்களில் 25 ஆட்சியர்கள் உறுப்பினர்கள். இது ஒரு நகைச்சுவை. 89 உறுப்பினர்கள் கொண்ட

ஆலோசனை வாரியத்தில் குழுவில் உள்ள அனைத்து 25 உறுப்பினர்களும் இருப்பார்கள். இது முற்றிலும் ஜனநாயகத்திற்கு விரோதமானது.

இந்த மசோதாவை ஏன் கொண்டு வருகின்றார்கள்? தரமான மற்றும் எளிதில் அனைவரும் பெறக்கூடிய மருத்துவ கல்வியை அளிக்க வேண்டும் என்பதுதான். இதுதான் அவர்களுடைய இலக்கு. பிறகு ஏன் அவர்கள் இந்திய மருத்துவ குழு சட்டத்தை நீக்கினார்கள்?

அவர்களுடைய இலக்குகளை இந்த குழு மூலம் அடையப்போகின்றார்களா? இது சாத்தியமே இல்லை. அவர்கள் இந்திய மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநரை உறுப்பினராக கொண்டுவருகிறார்கள்.

இந்திய அறிவியல் கழகம், இந்திய தொழில்நுட்ப நிறுவனம், இந்திய மேலாண்மை நிறுவனத்தின் பங்கு சுகாதாரத்துறையில் என்ன? செயலாளர் மீண்டும் தேர்வு செய்யப்படுகின்றார். அவருடைய வயது என்ன? அது 70 வயது. நீங்கள் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?

பணத்தை கொள்ளையடிக்க கல்லூரிகளை நீங்கள் அனுமதிக்கிறீர்கள். ஏழை மக்களிடம் இருந்து ரத்தத்தை உறிஞ்ச நீங்கள் அனுமதிக்கிறீர்கள். நீங்கள் இந்திய மருத்துவ கழகத்தை குற்றம் சாட்டுகிறீர்கள். கட்டணங்கள் உயர்நீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பில் இருக்கும்.

உயர்நீதிமன்ற நீதிபதி சொத்துக்களை பார்ப்பார். ஆசிரியர்களின் சம்பளம் அவருக்கு தெரியும். இப்போது வழிகாட்டுதல்கள் உள்ளன. இது நிலையானதா? அது இயங்கக்கூடியதா? நீங்கள் ஏற்கனவே நீட்டை திணித்துள்ளீர்கள். ]

தமிழ்நாட்டில் பல ஏழை மக்கள் தங்களது உயிரை விட்டுள்ளனர். நான் நீட்டில் தோல்வியடைந்தால் நான் வெறும் 10+2 ஆகவே இருப்பேன். இதுதான் சமூக நீதியா? நீங்கள் சமூக சுகாதார அளிப்பவருக்கு வருகின்றீர்கள்.

ஒழுங்கு விதிமுறைகளுடன் நவீன அறிவியல் மருத்துவத்துடன் தொடர்புடையவராக இருக்க வேண்டும் என்று 32 ஆவது பிரிவு சொல்கின்றது. இந்த விதிமுறைகள் என்ன? அதற்கு முழு மௌனம் தான் உள்ளது.

இந்த மூன்று அமைப்புக்களின் முடிவுகள் மத்திய அரசின் முடிவுக்கு உட்பட்டது. ஆகவே நீங்கள் முழுமையான அதிகாரத்தை அரசாங்கத்திற்கு அளிக்கின்றீர்கள். ஆகவே இந்த மூன்றடுக்கு முறை மிகப்பெரிய ஊழலுக்கு வழி வகுக்க போகின்றது என்பதை நான் கூறிக்கொள்கின்றேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

-ஆர்.ஷபிமுன்னா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x