அணைகள் பாதுகாப்பு மசோதா: முக்கிய தகவல்கள்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

புதுடெல்லி

அணைகள் பாதுகாப்பு மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தாக்கல் செய்து பேசிய மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பேசிய முக்கியத் தகவல்கள்:

*  நாடு முழுவதும் 5,344 பெரிய அணைகள் உள்ளன.

* இந்த அணைகளில் 293 அணைகள் 100 ஆண்டுகளுக்கும் அதிகமான பழமையானவை.

* 1041 அணைகள் 50 ஆண்டுகள் முதல் 100 ஆண்டுகள் வரை பழமையானவை.

*  மாநிலங்களுக்கு இடையிலான ஆறுகள் மீதுதான் 92% அணைகள் உள்ளன.

* இந்த அணைகளைக் கண்காணிப்பதற்காகவே அணைகள் பாதுகாப்பு மசோதா கொண்டு வரப்படுகிறது. 

* பழமையான அணைகளைப் பராமரிக்கவும், கண்காணிக்கவும், தேவையான நடவடிக்கை எடுப்பது அவசியம்

*  அணைகள் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகளை அமல்படுத்துவதும், இதுதொடர்பாக மாநிலங்களுக்கு இடையில் ஏற்படும் முரண்பாடுகளைக் களைவதுமே தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் முக்கிய நோக்கமாகும். 

* அணை பாதுகாப்புக்கான தேசிய கமிட்டி, தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் ஆகியவை உருவாக்கப்படுகிறது. 

* அணை பாதுகாப்பு தேசிய கமிட்டி கொள்கைகளை உருவாக்கும். தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் அவற்றைச் செயல்படுத்தும். 

* மாநிலங்கள் அணைகளைப் பாதுகாக்க தனியாக ஆணையத்தை உருவாக்க வேண்டும். 

* மொத்த அணைகளில் சுமார் 80 சதவீதம் (79.70%), கடந்த 50 ஆண்டுகளில் கட்டப்பட்டவை.

*  50 முதல் 100 ஆண்டுகளுக்குள்ளாக 12.7 சதவீத அணைகள் கட்டப்பட்டுள்ளன.

* 100 ஆண்டுகளுக்கு முன்பாக 3.97 சதவீத அணைகளும் கட்டப்பட்டுள்ளன.

* கட்டப்பட்ட காலம் துல்லியமாகக் கணக்கிட முடியாதவையாக 3.63% அணைகள் இருக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in