

டிஸ்கவரி தொலைக்காட்சியின் மேன் Vs வைல்ட் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டது குறித்து அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பேர் க்ரில்ஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அந்த ட்வீட்டில், "180 நாடுகளைச் சேர்ந்த மக்களும் இந்தியப் பிரதமர் மோடியின் இதுவரை பார்த்திராத மறுபக்கத்தைக் காண்பார்கள்.
வனவிலங்குகள் பாதுகாப்பு குறித்தும், சுற்றுச்சூழல் மாறுதல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த பிரதமர் மோடி வனத்துக்குள் பிரவேசித்திருக்கிறார்.
ஆகஸ்ட் 12 இரவு 9 மணிக்கு மேன் Vs வைல்ட் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியைக் காணுங்கள்" எனப் பதிவிட்டுள்ளார். #PMModionDiscovery என்ற ஹேஷ்டேகின் கீழ் இத்தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் நிகழ்ச்சிக்கான ப்ரோமோவும் இணைக்கப்பட்டுள்ளது.