

புதுடெல்லி
அமெரிக்காவில் நடைபெற்ற மணல் சிற்ப போட்டியில் இந்திய மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் வெற்றி பெற்று 'மக்கள் தேர்வு'விருதினை வென்றுள்ளார்.
ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக். சமூகப் பிரச்சினைகளை மையப்படுத்தி, மணல் சிற்பங்களை வடிவமைப்பதில் கைத்தேர்ந்தவரான இவர், இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், அமெரிக்காவின் பாஸ்டான் நகரில் உள்ள கடற்கரையில் சர்வதேச மணல் சிற்ப போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் உலகின் தலைசிறந்த மணல் சிற்ப கலைஞர்கள் 15 பேர் பங்கேற்றனர்.இதில், இந்தியா சார்பில் சுதர்சன் பட்நாயக்கும் கலந்து கொண்டார். அவர், பிளாஸ்ட் பொருட்களால் கடல் மாசடைவது தொடர்பான மணல் சிற்பத்தை வடிவமைத்திருந்தார்.
போட்டியின் இறுதியில், சிறந்த மணல் சிற்பத்தை தேர்ந்தெடுக்கும் பொருட்டு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில், அதிக அளவிலான வாக்குகளை சுதர்சன் பட்நாயக்கின் சிற்பம் பெற்றது. இதனைத் தொடர்ந்து, அவருக்கு 'மக்கள் தேர்வு' விருது வழங்கப்பட்டது. சுதர்சன் பட்நாயக்