

மும்பை
மகாராஷ்டிரா, பிஹார், ராஜஸ் தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங் களிலும் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
மகாராஷ்டிரா தலைநகர் மும்பை மற்றும் தாணே நகரில் நேற்று ஒரே நாளில் 23 செ.மீ. மழை பெய்தது. மாநிலத்தின் இதர பகுதிகளிலும் இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதனால் மும்பை உட்பட பல்வேறு நகரங் களில் ரயில் சேவைகள் நேற்று ரத்து செய்யப்பட்டன. சாலை போக்குவரத்தும் முடங்கியது.
ராஜஸ்தானில் கடந்த சில நாட் களாக பெய்து வரும் கனமழை யால் 13 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்த சில நாட்களுக்கு கன மழை தொடரும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உத்தர பிரதேசத்தின் ஆக்ரா உள்ளிட்ட நகரங்களில் நேற்று கன மழை பெய்தது. ஆக்ராவில் சாலை போக்குவரத்து ஸ்தம்பித்தது.
மத்திய பிரதேசத்தில் நேற்று கனமழை பெய்தது. அங்குள்ள தாமோ நகரில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட முதலை குடி யிருப்பு பகுதியில் நுழைந்தது. அதை வனத்துறையினர் பிடித்து சென்றனர்.
பிஹாரில் கனமழையால் 13 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இதுவரை 127 பேர் உயிரிழந்துள்ளனர். 85 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அசாம் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருவதால் சுமார் 18 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மணிப்பூர், சிக்கிம், மேகாலயா மாநிலங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.