கோப்புப்படம்
கோப்புப்படம்

காஷ்மீரில் கூடுதல் படை ஏன்? மத்திய அரசு அதிகாரிகள் விளக்கம்

Published on

புதுடெல்லி

பாகிஸ்தான் தீவிரவாத குழுக் கள் காஷ்மீரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத் ததால், அங்கு கூடுதலாக பாது காப்புப் படை வீரர்களை குவிக்க மத்திய அரசு உத்தரவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் காஷ்மீருக்கு சென்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு குறித்து தீவிரவாத தடுப்புப் பிரிவு உயர் அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தினர்.

இந்நிலையில் அவரது பரிந் துரையின் அடிப்படையில் கூடுத லாக 10 ஆயிரம் வீரர்களை காஷ் மீருக்கு அனுப்பி வைக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு உயர் அதிகாரிகள் நேற்று கூறும்போது, “பாகிஸ்தானிலிருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புகள் காஷ் மீரில் மிகப்பெரிய அளவில் தாக் குதல் நடத்த இருப்பதாக உளவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத் தது. இதையடுத்து, காஷ்மீர் சென்றிருந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தீவிரவாத தடுப்புப் பிரிவினருடன் ஆலோசனை நடத்தினார். குறிப்பாக, பாதுகாப்பு நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

இதன் அடிப்படை யிலேயே காஷ்மீரில் கூடுதல் வீரர்களை பாதுகாப்புப் பணி யில் ஈடுபடுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, அசம்பாவித சம்பவங்கள் நடை பெறுவதைத் தடுப்பதற்காகவும் தாக்குல் முயற்சியை முறியடிக் கவும் விழிப்புடன் இருக்க வேண் டும் என பாதுகாப்புப் படை யினருக்கு உத்தரவிடப்பட்டுள் ளது” என்றனர்.

காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல் வெற்றிகரமாக நடத்தி முடிக் கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்ட மிட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் அமர்நாத் யாத்திரை யும் அமைதியாக நடைபெற்று வருகிறது. இதுவும் தீவிரவாதி களையும் அவர்களை இயக்கி வரும் பாகிஸ்தான் அரசு மற்றும் அந்நாட்டு உளவு அமைப்பையும் (ஐஎஸ்ஐ) ஆத்திரமடையச் செய் துள்ளது. இதனால் அமைதியை சீர்குலைப்பதற்காக அங்கு தாக்கு தல் நடத்த தீவிரவாதிகள் திட்ட மிட்டது அம்பலமாகி உள்ளது. காஷ்மீர் நிலவரத்தை தேசிய பாது காப்பு ஆலோசகர் அஜித் தோவல் உன்னிப்பாக கவனித்து வருகிறார்.

காஷ்மீருக்கு வழங்கப்பட் டுள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யவே கூடுதல் படை குவிக்கப் பட்டுள்ளதாக சிலர் குற்றம் சாட் டினர். அதற்கு மறுப்பு தெரிவித்து மத்திய அரசு அதிகாரிகள் விளக் கம் அளித்துள்ளது குறிப்பிடத் தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in