Published : 29 Jul 2019 11:32 AM
Last Updated : 29 Jul 2019 11:32 AM

ஆகஸ்ட் 3, 4-ல் பாஜக எம்.பி.க்களுக்கு 2 நாட்கள் சிறப்பு பயிற்சி முகாம்: பிரதமர் நரேந்திர மோடி நடத்துகிறார்

புதுடெல்லி

பாஜக எம்.பி.க்களுக்காக 2 நாட்கள் சிறப்பு பயிற்சி முகாமை பிரதமர் நரேந்திர மோடி நடத்துகிறார்.

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 303 தொகுதிகளைக் கைப் பற்றி அபார வெற்றி பெற்றது. இதன்படி மக்களவையில் பாஜக வுக்கு தற்போது 303 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் 133 எம்.பி.க் கள் முதல்முறையாக தேர்ந்தெடுக் கப்பட்டவர்கள்.

பாஜக எம்.பி.க்களுக்கும் அவர் களது குடும்பத்தினருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அவ்வப்போது விருந்து அளித்து வருகிறார். இந்த விருந்தின்போது எம்.பி.க்களின் தொகுதி பிரச்சினைகள், குடும்ப பின்னணி குறித்து பிரதமர் விசாரிக்கிறார்.

எம்.பி.க்களின் குடும்பங்களில் ஏதாவது பிரச்சினை இருந்தால் அந்த பிரச்சினையை தீர்க்க ஆலோ சனை வழங்குகிறார். மேலும் தொகுதிகளில் மக்கள் பிரச்சினை களை தீர்ப்பது குறித்தும் அறி வுரைகளை கூறி வருகிறார்.

மக்களவையில் பாஜக எம்.பி.க் கள் அனைவரும் தவறாது பங் கேற்க வேண்டும். முக்கிய மசோ தாக்களை நிறைவேற்றும்போது எம்.பி.க்கள் கண்டிப்பாக அவை யில் இருக்க வேண்டும் என்று பிரத மர் நரேந்திர மோடியும் கட்சித் தலைவர் அமித் ஷாவும் ஏற் கெனவே அறிவுறுத்தியுள்ளனர். எனினும் பல்வேறு காரணங்களைக் கூறி சில எம்.பி.க்கள் அவையில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து பாஜக எம்.பி.க்களுக்காக வரும் ஆகஸ்ட் 3, 4-ம் தேதிகளில் சிறப்பு பயிற்சி முகாமை நடத்த பிரதமர் நரேந்திர மோடி ஏற்பாடு செய்துள் ளார். இதில் கட்சியின் தலைவர் அமித் ஷா, செயல் தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் மூத்த அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

பத்திரிகையாளர் சந்திப்புகளின் போது எம்.பி.க்கள் சர்ச்சையின்றி எவ்வாறு பேச வேண்டும், நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும்போது அவையில் கண் டிப்பாக கலந்து கொள்ள வேண் டும், கேள்வி நேரத்தில் என்னென்ன கேள்விகளை எழுப்ப வேண்டும் என்பன உட்பட பல்வேறு விவ காரங்கள் குறித்து பயிற்சி முகாமில் எம்.பி.க்களுக்கு விளக்கம் அளிக் கப்பட உள்ளது.

எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டுக்காக ஆண்டுதோறும் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் படுகிறது. இந்த நிதியை எவ்வாறு ஆக்கப்பூர்வமாக செலவிடுவது என்பது குறித்தும் எம்.பி.க்களுக்கு அறிவுரை வழங்கப்பட உள்ளது.

மத்திய அரசு சார்பில் ஏழை குடும்பங்களுக்கு இலவச காஸ் இணைப்பு, ஏழை குடும்பங்களுக் காக ஆயுஷ்மான் மருத்துவக் காப்பீடு திட்டம், விவசாயிகளுக் காக ஆண்டுக்கு ரூ.6,000 நிதி யுதவி மற்றும் இதர திட்டங்கள் குறித்து மக்களிடம் எம்.பி.க்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண் டும். அரசு திட்டங்களை மக்களிடம் எவ்வாறுகொண்டு செல்ல வேண் டும் என்பது குறித்தும் பயிற்சி முகாமில் செயல்விளக்கம் அளிக் கப்பட உள்ளது.

எனவே கடினமான பயிற்சி முகா மாக இருக்கும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x