

இந்தி நடிகர் ராகுல் போஸிடம் சட்டத்துக்கு புறம்பாக 2 வாழைப்பழத்துக்கு ஜிஎஸ்டி வசூலித்த சண்டிகர் ஓட்டல் நிர்வாகத்துக்கு, வரித் துறை ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
இந்தி நடிகரும் தமிழில் விஸ்வரூபம்-2 படத்தில் நடித்தவ ருமான ராகுல் போஸ், சமீபத்தில் படப்பிடிப்புக்காக சண்டிகர் சென் றுள்ளார். அங்குள்ள ஜே.டபிள்யூ.மாரியாட் நட்சத்திர ஓட்டலில் கடந்த 22-ம் தேதி தங்கிய அவர், அங்கு 2 வாழைப்பழம் சாப்பிட்டுள் ளார். இதற்கான பில்லில் ஜிஎஸ்டி உட்பட ரூ.442.50 என குறிப் பிடப்பட்டிருந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இது தொடர்பாக ட்விட்டரில் 38 விநாடிகள் ஓடக் கூடிய வீடியோவையும் வெளியிட் டார். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த வீடி யோவைப் பார்த்த பலர் ராகுலுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். எனினும், சிலர் அவருக்கு எதிராகவும் கருத்துகளை பதிவிட்டிருந்தனர்.
இந்நிலையில், சிஜிஎஸ்டி சட்டத்தின் 11-வது பிரிவை (விலக்கு அளிக்கப்பட்ட பொருளுக்கு சட்டவிரோதமாக வரி வசூலித்தல்) மீறி வாழைப்பழத்துக்கு ஜிஎஸ்டி வசூலித்த ஓட்டல் நிர்வாகத்துக்கு, சண்டிகரின் கலால் மற்றும் வரித் துறை ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து சண்டிகரின் கலால் மற்றும் வரித் துறை ஆணையர் மன்தீப் சிங் பிரார் கூறும்போது, “வாழைப்பழத்துக்கு ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டதாக நடிகர் பதி வேற்றம் செய்த வீடியோ குறித்து விசாரிக்க, உதவி ஆணையர் ராஜீவ் சவுத்ரிக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. சட்டத்தை மீறியது உறுதி செய்யப்பட்டால் கடும் நட வடிக்கை எடுக்கப்படும்” என்றார்.