Published : 28 Jul 2019 06:56 PM
Last Updated : 28 Jul 2019 06:56 PM

மக்கள் பணத்தை வேறு நிறுவனங்களுக்கு  திருப்பி விட்டதில் அமரப்பள்ளியுடன் மேலும் சில நிறுவனங்களும் உடந்தை: உச்ச நீதிமன்ற உத்தரவில் சுட்டிக்காட்டப்பட்ட தகவல்கள்

வீடு கட்டித்தருவதாக மக்களிடம் பணத்தை பெரிய அளவில் வாங்கி அந்தப் பணம் பல்வேறு நிறுவனங்களுக்குக் கைமாறி மக்கள் ஏமாற்றப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அன்று ‘மைல்கல்’ தீர்ப்பை வழங்கிய நிலையில், அந்தத் தீர்ப்பில் ஐசிஐசிஐ புருடென்ஷியல் சொத்து நிர்வாக நிறுவனம், தோனி மற்றும் சாக்‌ஷி தோனியின் ரிதி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மெண்ட், ஜேபி மோர்கன் உள்ளிட்ட முக்கியப் பெயர்களையும் குறிப்பிட்டு கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

அமரப்பள்ளி ரியால்டி நிறுவனம் குறித்த தடயவியல் தணிக்கை அறிக்கையை மேற்கோள் காட்டிய உச்ச நீதிமன்றம், அமரப்பள்ளி சபையர் டெவலப்பர்ஸ் தனியார் நிறுவனம் வெளியிட்ட கடன்பத்திரங்களுக்காக ஐசிஐசிஐ புருடென்ஷியல் சொத்து நிர்வாக நிறுவனம் அமரப்பள்ளிக்கு ரூ.74 கோடி அளித்துள்ளது. இது நடந்தது 2011-12 நிதியாண்டில். இந்தக் கடன்பத்திரங்களுக்கான ஆண்டு வட்டி விகிதம் 17%.

இதில் டிசம்பர் 16. 2010 முதலீட்டாளர்கள்-பங்குதாரர்கள் ஒப்பந்தத்தில் “ஏகப்பட்ட விதிமீறல்கள்” இருந்துள்ளது.  அதாவடு இயக்குநர்கள் நியமிக்கப்படவில்லை, முதலீட்டாளர் தரப்பிலிருன்ஹ்டு வங்கிக் கணக்குத் தொடங்காதது, ஒப்பந்தத்தின் விதிமுறைகள் படி மக்கள் பணத்தைச் செலவு செய்யாதது என்று ஏகப்பட்ட கோளாறுகள் இருந்ததை ஆடிட் அறிக்கை கூற அதை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது தன் தீர்ப்பில்.

இந்த ஒப்பந்தத்தின் மற்ற பிரிவுகளும் முதலீட்டாளர் உறுதியளித்த வகையில் கடைபிடிக்கப்படவில்லை என்கிறது ஆடிட் அறிக்கை.

கடன்பத்திர ஒப்பந்தம் மற்றும் முதலீடு-பங்குதாரர்கள் ஒப்பந்தங்கள் எல்லாம் ‘வெறும் வெற்று போலி ஆவணங்களே’ உச்ச நீதிமன்ற உத்தரவில், “அமரப்பள்ளி நிறுவனக் குழுமம் மற்றும் ஐசிஐசிஐ புருடென்ஷியல் சொத்து நிர்வாக நிறுவனம் ஆகிய இரு நிறுவனங்களும் ஒன்றுக்கொன்று புரிதலின் அடிப்படையில் எந்த வித குறிப்பிட்ட  நோக்கங்களுக்காகவும் இல்லாமல் மக்கள் பணங்களை வேறு நிறுவனங்களில் கைமாற்றியுள்ளது.” என்று கூறப்பட்டுள்ளது.

 அமரப்பள்ளியின் சட்டவிரோத நடவடிக்கைகளினால் பயனடைந்தவர்களில், மக்களின் கடின உழைப்புப் பணம் கைமாறியவர்களில் ஜே.பி.மோர்கன்,  கிரிக்கெட் வீரர் தோனி, சாக்‌ஷி தோனியின் ரிதி ஸ்போர்ட்ஸ்,  ஐசிசி சேர்மன் ஷஷாங்க் மனோகர் பெயர்கள் உள்ளன என்கிறது ஆடிட் அறிக்கை, இது தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டு கடும் நடவடிக்கைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சுமார் 42,000 பேர் வீடு வாங்க அம்ரப்பள்ளி குழுமத்தின் திட்டங்களுக்காக பணம் கொடுத்துள்ளனர், இவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு நிம்மதியை அவர்களுக்கு அளித்துள்ளது.

ரியல் எஸ்டேட் கட்டுப்பாட்டு ஆணையத்தில் அமரப்பள்ளியின் பதிவை உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமை அமர்வு ரத்து செய்தது. 

அரசு நடத்தும் என்.பி.சி.சி அனைவருக்கும் வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்றும் கூடுதலாக அவர்களிடமிருந்து எந்தத் தொகையையும் வாங்கக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவு அமரப்பள்ளி குழுமத்துக்கானது மட்டுமல்ல, மற்ற ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் வீடுகளை குறித்த நேரத்தில் முடித்துக் கொடுக்கவும் பரிந்துரைக்கிறது.  வீடு வாங்குவதற்காக தங்கள் கடின உழைப்பிலிருந்து சேமித்த பணத்தை அளித்தவர்களை அங்கும் இங்கும் அலையவிடக்கூடாது என்றும் கடினமாக சம்பாதித்து சேர்க்கும் மக்களை துன்புறுத்தல் கூடாது என்பதும் இந்த உச்ச நீதிமன்ற உத்தரவின் அறிவுறுத்தல்களாகும். 

-ஐ.ஏ.என்.எஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x