திருச்சானூர் கோயிலில் 9-ம் தேதி வரலட்சுமி விரதம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் ஆகஸ்ட் 9-ம் தேதி வரலட்சுமி விரத விழா விமரிசை யாக நடைபெற உள்ளது.

இதுகுறித்து திருமலை திருப் பதி தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி பசந்த் குமார் நேற்று செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

பத்மாவதி தாயார் கோயிலில் ஆண்டுதோறும் வரலட்சுமி விரத விழா வெகு சிறப்பாக நடைபெறு வது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் இவ்விழாவை ஆகஸ்ட் 9-ம் தேதி கோயில் ஆஸ்தான மண்டபத்தில் சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்று காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை வரலட்சுமி ஆஸ்தானம் நடத்தப்படும். இதை முன்னிட்டு 9-ம் தேதி அபிஷேக அனந்தர தரிசனம், லட்சுமி பூஜை, கல்யாண உற்வசம், குங்கும அர்ச்சனை, சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகிறது. 9-ம் தேதி மாலையில் தாயார் தங்க ரதத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

வரலட்சுமி விரதத்தை முன் னிட்டு 9-ம் தேதி பக்தர்களுக்கு சிறப்பு வரிசை, இலவச அன்னபிர சாதம் மற்றும் பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு பசந்த் குமார் தெரிவித்தார்.

சுவரொட்டி வெளியீடு

முன்னதாக வரலட்சுமி விரத விழா சுவரொட்டி வெளியிடப்பட் டது. இதனை பசந்த் குமார், தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஜான்சிராணி, கண்காணிப்பாளர் ஈஸ்வரய்யா ஆகியோர் வெளி யிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in