பாஜகவுக்கு குமாரசாமி நிபந்தனை ஆதரவு ?

பாஜகவுக்கு குமாரசாமி நிபந்தனை ஆதரவு ?
Updated on
1 min read

இரா.வினோத்

கர்நாடகாவில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள பாஜகவுக்கு முன்னாள் முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத கட்சி நிபந்தனை ஆதரவு அளிக்கும் என்று கூறப்படுகிறது.

கர்நாடக முதல்வராக பொறுப் பேற்றுள்ள எடியூரப்பா தலைமை யிலான பாஜக அரசை ஆதரிக்க வேண்டும் என மஜதவை சேர்ந்த சில எம்எல்ஏக்கள் விரும்புகின் றனர். இது தொடர்பாக தங்களது கட்சி மேலிடத்தை அவர்கள் வலி யுறுத்தியதாக கன்னட நாளிதழ் களில் நேற்று செய்திகள் வெளி யாகின. இந்தச் செய்தி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத் திய நிலையில், காங்கிரஸார் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகினர்.

இந்நிலையில் மஜத மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான ஜி.டி.தேவகவுடா, ‘‘அரசியலில் கடந்ததை நினைத்து வருந்துவது தேவையற்றது. காங்கிரஸுடன் இணைந்து மஜத எதிர்க்கட்சி வரிசையில் அமருவதைவிட பாஜகவை ஆதரிக்கலாம். இதன் மூலம் மஜதவுக்கு அமைச்சர் பதவி, வாரியத் தலைவர் பதவிகூட கிடைக்கும். இல்லாவிடில் பாஜ கவை வெளியில் இருந்து ஆதரித் தால் கூட, மஜதவுக்கு நன்மை ஏற்படும். இதனை குமாரசாமிதான் முடிவு செய்ய வேண்டும்’’ என் றார். இதனை மஜதவினர் கடுமையாக எதிர்த்த நிலையில், சிலர் ஆதரவு தெரிவித்தனர்.

மஜத எம்எல்ஏக்கள் சிலர் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதால், எடியூரப்பா தலைமையிலான அரசுக்கு மஜத நிபந்தனை ஆதரவு அளிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் முன்னாள் பிரத மரும், மஜத தேசிய தலைவரு மான தேவகவுடா நேற்று பெங்க ளூருவில் மஜத எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அடுத்தகட்ட நடவ டிக்கை, கட்சியை வளர்ப்பது, தேர்தலுக்கு தயாராவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. சுமார் 2 மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் குமாரசாமி, மூத்த தலைவர் ஜி.டி.தேவகவுடா உள்ளிட்ட 5 எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை.

இதையடுத்து தேவகவுடா செய்தியாளர்களிடம் கூறும்போது, “என் 60 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் பாஜக போன்ற கட்சியை பார்த்ததில்லை. பாஜக வினருடன் சேர்ந்து நமது எம்எல் ஏக்களே குமாரசாமியின் ஆட்சியை கவிழ்த்துவிட்டனர். அவரது ஆட் சியை கவிழ்த்த பாஜகவுடன் நிச் சயம் கூட்டணி வைக்க முடியாது. பாஜகவுடன் கூட்டணி என்ற பேச் சுக்கே இடமில்லை. அந்த எண் ணத்தில் யாரும் இங்கு இருக்க வேண்டாம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in