

பிடிஐ
அமெரிக்காவின் விமான தயா ரிப்பு நிறுவனமான போயிங், இந்தியாவுடனான ஒப்பந்தப்படி 4 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை விமானப்படையிடம் நேற்று ஒப்படைத்தது.
நாட்டின் ராணுவ பலத்தை நவீனப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, போரின்போது பயன்படுத்தக்கூடிய, உலகிலேயே அதிநவீன ஏஎச்-64இ அப்பாச்சி ரகத்தைச் சேர்ந்த 22 ஹெலி காப்டர்களை அமெரிக்காவிட மிருந்து வாங்க முடிவு செய்யப் பட்டது. இதன்படி இந்திய விமானப் படை, அமெரிக்க அரசு மற்றும் அந்நாட்டின் போயிங் நிறுவனத் துடன் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் செய்து கொண்டது.
இதன்படி முதல் 4 ஹெலி காப்டர்கள் உ.பி.யின் காசியாபாத் அருகே உள்ள ஹிண்டன் விமானப் படை தளத்தில் இந்திய விமானப் படையிடம் நேற்று ஒப்படைக்கப் பட்டதாக போயிங் தெரிவித்துள் ளது. மேலும் 4 ஹெலிகாப்டர்கள் அடுத்த வாரம் ஒப்படைக்கப்படும் என்றும் அந்த நிறுவனம் தெரி வித்துள்ளது.
இந்த 8 ஹெலிகாப்டர்களும் பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள விமானப்படை தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, வரும் செப்டம்பர் மாதம் முறைப்படி பணியில் சேர்க்கப்படும் எனத் தெரிகிறது. அடுத்த ஆண்டுக்குள் அனைத்து ஹெலிகாப்டர்களும் ஒப்படைக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.
நமது எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ள இந்த அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை சேர்ப்பதன் மூலம் நமது படையின் போர்த் திறன் மேலும் வலுவடை யும் என இந்திய விமானப்படை உயர் அதிகாரிகள் தெரிவித்துள் ளனர்.