

இரா.வினோத்
கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிப் பெறுவது குறித்து பாஜக மூத்த தலைவர்களுடன் எடியூரப்பா தீவிர ஆலோசனை நடத்தினார்.
கர்நாடகாவில் காங்கிரஸ், மஜதவை சேர்ந்த 15 அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜி னாமா செய்ததை தொடர்ந்து, கடந்த 23-ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசு தோல்வி அடைந்தது.
இதனால் குமாரசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதை யடுத்து, 105 எம்எல்ஏக்களின் ஆதரவை கொண்டுள்ள பாஜக மாநில தலைவர் எடியூரப்பா நேற்று முன்தினம் முதல்வராக பொறுப்பேற்றார். நாளை பேரவையைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவ தாக எடியூரப்பா அறிவித்து உள்ளார்.
இதையடுத்து, நேற்று பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், ஷோபா கரந்தலாஜே, பசவராஜ் பொம்மை, அஷ்வந்த் நாராயணா உள்ளிட்டோருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த சந் திப்பின்போது, திங்கள்கிழமை நடை பெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எவ் வாறு வெற்றிப் பெறுவது, காங்கிரஸ், மஜதவினரை எவ்வாறு எதிர்கொள்வது, மும்பையில் பாஜகவினரின் கண்காணிப் பில் தங்கியுள்ள அதிருப்தி காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களை அழைத்து வர லாமா என்பது உள்ளிட்ட விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது, மும்பையில் தங்கியுள்ள அதிருப்தி காங்கிரஸ், மஜத எம்எல்ஏக் களை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைத்து வந்தால், கடந்த வாரம் சுயேச்சை எம்எல்ஏக்கள் தங்கிய வீட்டை காங்கிரஸார் சுற்றி வளைத்ததைப் போல, பிரச்சினை செய்ய வாய்ப்பு உள்ளது.
எனவே, அவர்களை பெங்களூருவுக்கு அழைத்து வர வேண்டாம். பெரும்பான் மையை நிரூபித்த பின்னர், பெங்களூரு அழைத்து வரலாம் என முடிவெடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, சொகுசு விடுதி யில் தங்கியுள்ள 105 பாஜக எம்எல்ஏக் களுடன் எடியூரப்பா ஆலோசனை நடத் தினார். அப்போது, நம்பிக்கை வாக்கெடுப் பில் கலந்துக்கொள்வது குறித்து அவர் ஆலோசித்தார்.
இந்த சந்திப்பின்போது, எடியூரப்பா வின் மகன் விஜயேந்திரா, சுயேச்சை எம்எல்ஏ நாகேந்திராவை அங்கு அழைத்து வந்தார். அவர் பாஜகவை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளதால், பாஜகவின் பலம் தற்போது 106-ஆக உயர்ந்துள்ளது.
மொத்தமாக 224 எம்எல்ஏக்களைக் கொண்ட பேரவையில், கடந்த வாரம் பேர வைத் தலைவர் ரமேஷ்குமார் 3 எம்எல்ஏக் களை தகுதி நீக்கம் செய்தார். இதனால், பேரவைத் தலைவரையும் சேர்த்து அவை யின் எண்ணிக்கை 221 ஆக குறைந்துள் ளது. இதில் 111 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தால்தான் எடியூரப்பாவால் பெரும் பான்மையை நிரூபிக்க முடியும்.
தற்போது பாஜகவுக்கு 106 எம்எல்ஏக் களின் ஆதரவு உள்ள நிலையில், காங் கிரஸ் - மஜதவுக்கு 99 பேரின் ஆதரவு உள் ளது. பகுஜன் சமாஜ் எம்எல்ஏ மகேஷ், மஜத கூட்டணியை ஆதரிக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், மும்பையில் தங்கி யுள்ள 13 அதிருப்தி எம்எல்ஏக்கள் அவைக்கு வராவிட்டால், ஆட்சி அமைக்க தேவையான எண்ணிக்கை 106-ஆக குறையும். எனவே, எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிப்பெற்று விடலாம் என வியூகம் அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, நம்பிக்கை வாக் கெடுப்பு நடைபெறுவதையொட்டி பெங் களூருவில் உள்ள கர்நாடக சட்டப்பேர வையை சுற்றி 2 கி.மீ. சுற்றளவுக்கு நாளை காலை 6 மணி முதல் 30-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் ஆட்கள் கூடவோ, போராட்டம், ஊர்வலம் நடத்தவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கையில்லா தீர்மானம்?
கர்நாடகா சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் 3 அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ததைப்போல, எஞ்சி யுள்ள 13 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக 13 பேரையும் தகுதி நீக்கம் செய்ய போகி றார் என தகவல் வெளியாகியுள்ளதால் எடியூரப்பா அதிர்ச்சி அடைந்துள்ளார். எனவே, அதற்கு முன்பாக பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் மீது நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டுவருவது குறித்து பாஜக மூத்த தலைவர்களுடன் எடியூரப்பா ஆலோசனை நடத்தியுள்ளார்.
ரமேஷ்குமார் தானாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்யாவிட்டால், நம்பிக்கையில்லா தீர்மானத்தை கட்டாயம் கொண்டு வர வேண்டும். இல்லையெனில், நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் பாஜக வுக்கு எதிராக செயல்பட வாய்ப்பு இருக் கிறது. அவருக்கு பதிலாக பாஜகவை சேர்ந்த ஒருவரை பேரவைத் தலைவராக நியமிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.