காஷ்மீருக்கு கூடுதலாக 10 ஆயிரம் வீரர்கள்; மக்களிடம் பயத்தை ஏற்படுத்தவா? - மெஹபூபா கேள்வி

காஷ்மீருக்கு கூடுதலாக 10 ஆயிரம் வீரர்கள்; மக்களிடம் பயத்தை ஏற்படுத்தவா? - மெஹபூபா கேள்வி
Updated on
1 min read

ஸ்ரீநகர்

காஷ்மீருக்கு கூடுதலாக 10 ஆயிரம் வீரர்களை அனுப்பும் மத்திய அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி, காஷ்மீர் பிரச்சினைக்கு ராணுவத்தால் தீர்வு காண முடியாது எனக் கூறியுள்ளார். 

காஷ்மீர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைக்காகவும் கூடுதலாக 10 ஆயிரம் துணை ராணுவப்படை வீரர்களை அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. காஷ்மீரில் ஏற்கெனவே 40 ஆயிரம் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இதுகுறித்து மெஹபூபா முப்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‘‘காஷ்மீரில் கூடுதலாக 10 ஆயிரம் வீரர்களை அனுப்பும் மத்திய அரசின் முடிவு மக்களிடம் பயத்தையும், மனரீதியிலான பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.

காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. நிலைமை சீராக உள்ள இருக்கும்போது கூடுதல் படைகள் ஏன். காஷ்மீரின் அரசியல் பிரச்சினைக்கு ராணுவத்தால் மட்டுமே தீர்வு காண முடியாது’’ எனக் கூறியுள்ளார். 
 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in