

ஸ்ரீநகர்
ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான முன்னா லஹோரி பாதுகாப்பு படையினரால் நீண்டகாலம் தேடப்பட்டு வந்த தீவிரவாதி ஆவார்.காஷ்மீரில் புர்ஹான் வாணிக்கு முக்கிய தீவிரவாதி கொல்லப்பட்டுள்ளார்.
இதுகுறித்து காவல் அதிகாரிகள் தெரிவித்த விவரம்:
"காஷ்மீரின் சோபியன் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவிலிருந்தே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இதில் இன்று அதிகாலை ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த பாகிஸ்தானின் அதிமுக்கிய தீவிரவாதியான லஹோரி கொல்லப்பட்டுள்ளார். இச்சண்டையில் லலோஹரியின் கூட்டாளியான இன்னொரு தீவிரவாதியும் கொல்லப்பட்டார்.
சமீப காலங்களாக காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் தொடர்ச்சியாக பொதுமக்கள் கொல்லப்பட்டு வந்ததற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் முன்னா லஹோரி பொறுப்பேற்றிருந்தார். பிஹாரி என்றும் அழைக்கப்படும் லஹோரி, பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் அதிமுக்கிய தீவிரவாதியாகளில் ஒருவர்.
இவர் காஷ்மீரிலிருக்கும் இளைஞர்களை தன் இயக்கத்தில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் (ஐ.இ.டி) தயாரிப்பதில் லஹோரி நிபுணர் என்கிறார்கள். மார்ச் 30-ம் தேதி பானிஹாலில் ஒரு பாதுகாப்பு படையின்மீது கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்தது. இதை நடத்தியது லஹோரி ஆவார்.
அதுமட்டுமின்றி ஜூன் 17 அன்று புல்வாமாவின் அரிஹால் என்ற இடத்தில் ராணுவ வாகனம் மீது பயங்கர கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது, இதில் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் இரண்டு பொதுமக்கள் உட்பட 9 பேர் காயமடைந்தனர் அந்த தாக்குதலிலும் லஹோரிக்கு தொடர்புள்ளது. அரிஹால் தாக்குதலையும் திட்டமிட்டு செயல்படுத்தியவர் லஹோரி என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று இரவு பாதுகாப்புப் படையினர் ஷோபியனின் போன்பஜார் பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது தீவிரவாதிகள் இருந்த பண்டே மொஹல்லா பகுதி முழுவதையும் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கிச் சுட்டனர். தேடுதல் வேட்டை சிறிது நேரத்தில் மோதலாக மாறியது. இதில் இரு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சண்டை நடந்த இடத்தில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன”.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான முன்னா லஹோரி பாதுகாப்பு படையினரால் நீண்டகாலம் தேடப்பட்டு வந்த தீவிரவாதி ஆவார்.காஷ்மீரில் புர்ஹான் வாணிக்கு முக்கிய தீவிரவாதி கொல்லப்பட்டுள்ளார்.
- பிடிஐ