

பெங்களூரு
பிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் கடந்த 24-ம் தேதி பதவியேற்றார். அவரது அமைச் சரவையில் அவரையும் சேர்த்து 33 அமைச்சர்கள் உள்ளனர். பிரத மருக்கு அடுத்து அதிக முக்கியத் துவம் வாய்ந்த நிதித் துறை பாகிஸ் தான் வம்சாவளியைச் சேர்ந்த சாஜித் ஜாவித்துக்கு வழங்கப்பட் டிருக்கிறது. நிதித் துறையின் இணை அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இன்போசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தியின் மகள் அக்சதாவை, ரிஷி சுனக் திரு மணம் செய்துள்ளார். இத்தம் பதிக்கு கிருஷ்ணா, அனுஷ்கா ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
நாராயண மூர்த்தி கூறியபோது, "எனது மருமகன் பிரிட்டிஷ் அமைச்சராக பதவியேற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கடினமாக உழைக்க வேண்டும். நேர்மையாக இருக்க வேண்டும். சமுதாயத்துக்கு சேவையாற்ற வேண்டும். இதுதான் ரிஷிக்கு நான் கூறும் அறிவுரை. அவர் மேன்மேலும் வளர வேண் டும்" என்று தெரிவித்தார்.
நாராயண மூர்த்தியின் மனைவி சுதா கூறியபோது, "கடவுளின் அரு ளால் மக்களுக்கு சேவையாற்ற எனது மருமகன் ரிஷிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. பெங்களூருவில் அவருக்கும் எனது மகளுக்கும் திருமணம் நடந்த லீலா பேலஸ் ஓட் டல் அவருக்குவிருப்பமான இட மாகும். கொஞ்சம் கூச்ச சுபாவம் உடையவர்" என்று தெரிவித்தார்.
இந்தியாவின் பஞ்சாப் மாநி லத்தை பூர்விகமாகக் கொண்ட ரிஷி சுனக், கடந்த 2015-ம் ஆண் டில் பிரிட்டனின் வடக்கு யார்க் ஷைர் தொகுதியிலிருந்து முதல் முறையாக எம்.பி.யாக தேர்ந் தெடுக்கப்பட்டார். 2017 தேர்தலில் அதே தொகுதியில் மீண்டும் வெற்றிவாகை சூடினார்.தற்போது முதல்முறையாக நிதித்துறை இணையமைச்சராகப் பொறுப் பேற்றுள்ளார்.
மேலும் 2 அமைச்சர்கள்
பிரிட்டிஷ் அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரீத்தி படேல், உள் துறை அமைச் சராகவும் அலோக் சர்மா, சர்வதேச வளர்ச்சித் துறை அமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர்.