Published : 27 Jul 2019 07:19 AM
Last Updated : 27 Jul 2019 07:19 AM

நியூமராலஜிபடி பெயரில் எழுத்தை மாற்றிய எடியூரப்பா

கர்நாடக முதல்வராக பதவியேற்ற மகிழ்ச்சியில் எடியூரப்பா.படம்: பிடிஐ

பெங்களூரு

பி.எஸ்.எடியூரப்பாவின் முழு பெயர் புக்கனகெரே சித்த லிங்கப்பா எடியூரப்பா. ஆன் மிகம், ஜோதிடம், வாஸ்து, ராசிக் கல், நியூமராலஜி உள் ளிட்டவற்றில் அதிக நம்பிக்கை கொண்டவர். கடந்த 2007-ல் முதல்வராக பொறுப்பேற்ற போது நியூமராலஜிபடி தனது பெயரை ஆங்கிலத்தில் ''B.S.Yeddyurappa'' என‌ மாற் றிக் கொண்டார். ஆனாலும் 7 நாட்களில் பதவியை இழந் தார். அதன் பிறகு 2 முறை முதல்வரானபோதும் அவரால் பதவிக்காலம் முடியும் வரை நீடிக்க முடியவில்லை. எனவே 4-ம் முறையாக முதல்வராக நேற்று பதவியேற்ற அவர் தனது பெயரை ஆங்கிலத்தில் B.S.Yediyurappa என மாற்றி யுள்ளார். 12 ஆண்டுகளுக்கு பிறகு பெயரை மாற்றியுள்ளார் எடியூரப்பா.

கடந்த எடியூரப்பா ஆட்சி காலத்தில் ஹாவேரியில் நடந்த விவசாயிகள் போராட் டத்தில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் எடியூரப்பாவின் செல்வாக்கு சரிவடைந்த நிலையில், அதை மீட்பதற்காக விவசாயிகளைப் போல பச்சை சால்வை அணிய ஆரம்பித்தார். விவசாயிகளை கவரும் வகையில் பல் வேறு நலத்திட்டங்களை நிறை வேற்றிய அவர், நாட்டிலே முதல்முறையாக விவசாயி களுக்காக தனி பட்ஜெட்டும் தாக்கல் செய்தார். விவ சாயிகளை நினைவூட்டும் வகையில் கடந்த முறையும், இம்முறையும் முதல்வராக பதவியேற்கும்போது பச்சை நிற சால்வை அணிந்து பதவியேற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x