பயணிகள் ரயில் கட்டணம் உயர்த்தப்படுமா?- அமைச்சர் பியூஷ் கோயல் பதில்

ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் : கோப்புப்படம்
ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் : கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி,

பெட்ரோல், டீசல் விலையில் விலை அதிகரித்து வரும் நிலையில், பயணிகள் ரயில் கட்டணத்தில் உயர்வு இருக்குமா? என்ற கேள்விக்கு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பதில் அளித்துள்ளார்.

மாநிலங்களவையில் இன்று கேள்வி நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. பி.கே.ஹரிபிரசாத் பேசுகையில், " பெட்ரோல், டீசல் விலையில் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் இருந்து வருகின்றன. இதனால் பயணிகள் ரயில் கட்டணத்தில் இந்த பாதிப்பு எதிரொலிக்குமா?, பயணிகள் கட்டணம் உயர்த்தப்படுமா?, ஏனென்றால், பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் உற்பத்தி வரியை லிட்டருக்கு ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் அரசுக்கு ஏதும் இருக்கிறதா ? எனக் கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதில் அளித்து ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்: " பெட்ரோல், டீசலின் உற்பத்தி வரி பட்ஜெட்டில் உயர்த்தப்பட்டபோதிலும், சந்தை விலையில் மாற்றம் இருந்தபோதிலும் கூட இப்போதுள்ள நிலையில், பயணிகள் ரயில் கட்டணம் ஏதும் உயர்த்தப்படாது. அவ்வாறு எந்த திட்டமும் அரசுக்கு இல்லை. 

கடந்த சில ஆண்டுகளாக ரயில்வே கொள்முதல் செய்து பயன்படுத்திவரும் டீசல் அளவு குறைந்து வருகிறது, பெரும்பாலான தடங்கள் மின்மயமாக்கப்பட்டு, 2022-ம்ஆண்டுக்குள் 100 சதவீதம் மின்மயமாக்கப்படும் " எனத் தெரிவித்தார். 

நாட்டில் அதிக அளவு டீசல் கொள்முதல் செய்து பயன்படுத்தும் நுகர்வோராக ரயில்வே இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் டீசல் எஞ்சின்களுக்குப் பதிலாக மின்சார எஞ்சின்களுக்கு மாறிவருகிறது குறிப்பிடத்தக்கது.

டீசல் கொள்முதலைக் குறைக்கும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக, மின்மயமாக்கப்பட்டு வருவதையடுத்து நாட்டின் ஒட்டுமொத்த மின்நுகர்வில் 1.27 சதவீதம் ரயில்வே நுகர்வு செய்யும் அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த 2018-19-ம் ஆண்டில் ரயில்வே 204.40 கோடி யூனிட் மின்சாரத்தையும், 310 கோடி லிட்டர் டீசலையும் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐஏஎன்எஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in