

ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் நேற்று மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.
பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளை நோக்கி நேற்று காலை 9.45 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.
கடந்த 72 மணி நேரத்தில் நடந்த 3-வது தாக்குதல் இதுவாகும்.
ஜம்மு மாவட்டத்தில் சர்வதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள இந்திய நிலைகள் மற்றும் கிராமங்களை நோக்கி திங்கள்கிழமை இரவு முழுவதும் பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தினர்.
இதற்கு முன், ஞாயிற்றுக்கிழமை இரவு காஷ்மீர் பள்ளத்தாக்கின் நவுகாம் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்கு தலில் பிஎஸ்எப் வீரர் ஒருவர் உயிரிழந்தார்.