கர்நாடகாவில் கூட்டணி ஆட்சியை கவிழ்த்ததால் பாஜக ஆட்சியும் விரைவில் கவிழ்ந்துவிடும்: முன்னாள் முதல்வர் குமாரசாமி கருத்து

கர்நாடகாவில் கூட்டணி ஆட்சியை கவிழ்த்ததால் பாஜக ஆட்சியும் விரைவில் கவிழ்ந்துவிடும்: முன்னாள் முதல்வர் குமாரசாமி கருத்து
Updated on
1 min read

இரா.வினோத்

பெங்களூரு

கர்நாடகாவில் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்த்த பாஜகவின் ஆட்சி நீண்ட காலம் நிலைக்காது. அது விரைவில் கவிழும் என அம்மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித் தார்.

குமாரசாமி தலைமையிலான மஜத எம்எல்ஏக்கள் கூட்டம் பெங்களூருவில் நேற்று நடை பெற்றது. முன்னாள் பிரதமர் தேவ கவுடா, 34 மஜத எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் அடுத்தக்கட்ட நட வடிக்கைகள் குறித்து விவாதிக்கப் பட்டது.

இந்தக் கூட்டத்தில் மஜதவை சேர்ந்த‌ 3 அதிருப்தி எம்எல்ஏக்கள் மீதும் கட்சி ரீதியாக நடவடிக்கை எடுப்பது என தீர்மானிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்தக் கூட்டத்துக்கு பின்னர், அங்கிருந்த செய்தியாளர்களிடம் குமாரசாமி கூறியதாவது:

கர்நாடகாவில் மஜத - காங் கிரஸ் கூட்டணி ஆட்சி எப்படி கவிழ்க் கப்பட்டது என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். பாஜகவுக்கும், எங் களுக்கு துரோகம் செய்த எம்எல்ஏக் களுக்கும் தக்க பாடம் கற்பிக்கப் படும்.

மக்கள் நிச்சயமாக அவர் களுக்கு தண்டனை வழங்குவார் கள். எங்கள் ஆட்சியை கவிழ்த்த பாஜகவின் ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது. அவர்கள் செய்த பாவத் தின் காரணமாக அது விரைவில் கவிழ்ந்துவிடும்.

அதிகாரிகளுக்கு நன்றி

கடந்த 14 மாதங்களாக எனது ஆட்சிக்கு முழுமையான ஆதரவு அளித்த அரசு அதிகாரிகள் அனை வருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள் கிறேன்.

அவர்களின் ஒத்துழைப்பால் தான் குறுகிய காலத்தில் மக் களுக்கு பல நல்ல திட்டங்களை நிறைவேற்ற முடிந்தது. மிக குறு கிய காலத்தில் விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய் ததை எனது ஆட்சியின் சாதனை யாக கருதுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கர்நாடகாவில் ஆட்சி அமைத் தது முதல் கடந்த 14 மாதங்களாக குமாரசாமி பல்வேறு கடும் நெருக் கடிகளை சந்தித்து வந்தார். பல முறை கண்ணீர் விட்டும் உருக்கமாக பேசியது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in